மீனவர்களுக்கு வங்கிக் கடன் வழங்க வலியுறுத்தல்
விருதுநகர், மார்ச் 21- தொழிலாளர் நலவாரியத்தால் பரிந் துரை செய்யப்படும் மீனவர்களுக்கு உட னடியாக வங்கிஙக கடன் வழங்க வேண் டும் என ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மனுவில் கூறியிருப்பதாவது: ஒன்றிய, மாநில அரசுகள் மீனவர் களுக்கு தேசிய வங்கிகள் மூலம் கடன் வழங்க பரிந்துரை செய்துள்ளன. அதன் அடிப்படையில், மீனவத் தொழிலாளர் களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு நல வாரியம் மூலம் பரிந்துரை செய்யப்பட் டது. இதையடுத்து, 300 தொழிலாளர்கள் மனு அளித்தனர். ஆனால், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை தொடர்ந்து கடன் தர மறுக்கின்றன. கடன் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
சுமைப்பணித் தொழிலாளர் பேரவை
இராஜபாளையம், மார்ச் 21- விருதுநகர் மாவட்ட சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) 29- ஆவது ஆண்டுப் பேரவை இராஜ பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட உதவித் தலைவர் கணேசன் துவக்கி வைத்தார் மாநில சுமைப்பணி சம்மேளன தலைவர் குணசேகரன் நிறைவு செய்து பேசினார். சாலைப் போக்குவரத்து தொழி லாளர் சங்க விருதுநகர் மாவட்டப் பொதுச்செயலாளர் எம்.திருமலை, கட்டு மான சங்க மாவட்டத் தலைவர் ஆரம் மாரி யப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்தப் பேரவையில் மாவட்டப் பொதுச்செயலாளராக பி.என். தேவா, மாவட்டத் தலைவராக பழனி, மாவட்டப் பொருளாளராக எம் சுப்பிரமணியன் உள்ளிட்ட ஒன்பது நிர்வாகிகள் 25 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மகளிர் தினக் கருத்தரங்கம்
சிவகங்கை, மார்ச் 21- சிவகங்கை மாவட்டத்தில் மாதர் சங் கம், சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற் றது. மாவட்டத் தலைவர் காந்திமதி தலைமை வகித்தார். அமுத பிரியா, கண்ணம்மா, சுபாலட்சுமி, ருக்குமணி, சாந்தி, மாஸ்கோ மலர், ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செய லாளர் ராணி, மாவட்டச் செயலாளர் சண்முகப்பிரியா, மாவட்டத் துணைச் செயலாளர் சாந்தி, மாவட்டக் குழு உறுப் பினர் தாமரைச்செல்வி, சிஐடியு மாவட் டத் தலைவர் வீரையா, மாவட்டச் செய லாளர் சேதுராமன், மாவட்டத் துணைத் தலைவர் உமாநாத் சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் ராதா ஆகியோர் பேசி னர்.
பழனியில் கடைகளுக்கு “சீல்”
பழனி, மார்ச் 21- பழனி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி கடைகளுக்கு தொடர்ந்து வாடகை செலுத்தாமல் காலம் தாழ்த்திய தால் நகராட்சி ஆணையர் கமலா, வரு வாய் ஆய்வாளர் காந்தி, பொறியாளர் வெற்றிச் செல்வி ஆகியோர் வாடகை நிலு வையில் உள்ள கடைகளுக்கு திங்க ளன்று “சீல்” வைத்தனர்.
காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு
பழனி, மார்ச் 21- பழனியை அடுத்துள்ள ராசாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மகேஸ்வ ரன்-லதா தம்பதியினரின் ஆறு மாத ஆண் குழந்தை கோகுல் திங்களன்று பிற்பகல் 3.30 மணி அளவில் காணாமல் போனது. பெற்றோர் தேடிய போது வீட்டின் அருகே உள்ள ஆற்றில் குழந்தை சடலமாக கிடந் துள்ளது. இது குறித்து பழனி காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற காவலரைத் தாக்கி ரூ.15 லட்சம் வழிப்பறி
தஞ்சாவூர், மார்ச் 21 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையை அடுத்த பாப்பாபட்டி கிரா மத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (65) ஓய்வு பெற்ற காவலர். இவர் திங்கள்கிழமை காலை தஞ்சாவூர் அருகே பிள்ளையார் பட்டியில் உள்ள தனது மகள் வீட்டில் இருந்து ரூ.15 லட்சம் பணத்துடன் இருசக்கர வாக னத்தில் கறம்பக்குடியில் உள்ள பத்தி ரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றார். அப்போது மருங்குளம் - கறம்பக்குடி சாலையில் கோபால் நகர் அருகே, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் லட்சுமணனை தாக்கினர். அதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதை யடுத்து அவரிடம் இருந்த ரூ.15 லட்சம், இரு சக்கர வாகனத்தினை பறித்துக் கொண்டு, மர்மநபர்கள் தப்பி ஓடி விட்டனர். தக வல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு தஞ்சா வூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவ ளிப்பிரியா மற்றும் வல்லம் காவல்துறை யினர் சென்று, லட்சுமணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பு’
தூத்துக்குடி,மார்ச் 21 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ஆலந்தலை கிராமத்தைச் சேர்ந்த ஜான்சன் (வயது 29) என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு : எங்களின் பூர்வீக ஊர் ஆலந்தலை கிராமம். எங்கள் ஊரில் பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் சிலர் விதித்துள்ள சில கட்டுப்பாடுகள் மானுட சமூகத்திற்கு எதிராக உள்ளது. மாற்று சமூக பெண்களை யோ / ஆண்களையோ திருமணம் செய்தால் அவர்கள் ஊருக்குள் வாழ்வதற்கு அனு மதிப்பதில்லை. அதை மீறினாலும் அவர்கள் மீது வன்முறை தாக்குதல் குறிப்பிட்ட சில நபர்களால் நடந்த வண்ணம் உள்ளது. நான் கடந்த 2012ஆம் ஆண்டில் வேறு சமூகத்தை சார்ந்த கலையரசி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எனக்கு 4 குழந்தைகள் உள்ளனர். ஆலந்தலையில் கடைப்பிடிக்கப்படும் இந்த நடைமுறையால் ஊரில் உள்ள குறிப்பிட்ட சில நபர்களால் நான் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டேன். அதனால் எனக்கு பெருத்த தொழில் நஷ்டம் ஏற்பட்டு குடும்பம் நடத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். கடந்த 9 வருடங்க ளாக ஊருக்குள் செல்ல முடியாமலும் வெளி ஊரில் கடல் தொழிலுக்கு செல்ல முடி யாமலும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறேன். எனவே மாவட்ட ஆட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
பொது வேலை நிறுத்தம் ஓய்வு ஆசிரியர்கள் ஆதரவு
சிவகங்கை, மார்ச் 21- மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெற வுள்ள அகில இந்திய பொது வேலை நிறுத் தித்திற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆத ரவு தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட் டார பேரவை தலைவர் பாலசுப்பிரமணி யன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் முத்துச்சாமி, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ஜெயபாலன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க காரைக்குடி வட்டா ரத் தலைவர் மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு புதிய பென் சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை தொடர வேண் டும் ஓய்வூதியர்களுக்கான 24 மாத அக விலைப்படி நிலுவையை வழங்க வேண்டும். ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ 50,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிப்பது என்றும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
முத்துச்சாமிபுரம் ஊராட்சியில் நிர்வாக சீர்கேடு பஞ்சாயத்து துணைத் தலைவர் பகீர் புகார்
விருதுநகர், மார்ச் 21- விருதுநகர் மாவட்டம், இராஜபாளை யம் ஊராட்சி ஒன்றியம், முத்துச்சாமிபுரம் ஊராட்சியில் நிர்வாகச் சீர்கேடு தலை தூக்கி உள்ளதாக ஊராட்சிமன்ற துணைத் தலை வர் சந்திரா மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: ஊராட்சித் தலைவர் மக்கள் பிரச்ச னைக்கு முக்கியத்துவம் தருவதில்லை. உறுப்பினர்கள் தலையிட்டு அதை சரி செய்து வந்தோம். சில மாதங்களாக ஊராட்சி பகுதி யில் வாறுகால் சுத்தம் செய்தல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் நடைபெறவில்லை. குடி நீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. காம ராஜ் நகரில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள் ளது. மின் மோட்டார்களை பழுது பார்க்க வில்லை. ஊராட்சி மன்றத் தலைவரின் கண வர் நிர்வாகத்தில் தலையிடுகிறார். மோசடி யாக பில்கள் தயார் செய்யப்பட்டு பணம் எடுக்கப்படுகிறது. இதனால் நிதி இழப்பு ஏற் படுகிறது. ஊரக வேலை வாய்ப்புத் திட் டத்தில் போலியான பயணாளர்களை நிய மித்து மோசடி செய்து வருகிறார். இதனால் உண்மையான தொழிலாளர்களுக்கு ஊதி யம் கிடைக்கவில்லை. வெள்ளைத் தாளில் தலைவரும் அவரது கணவரும் என்னிடம் கையெழுத்து கேட்கின்றனர். ஊராட்சியில் அடிப்படைப் பிரச்சனை களை சீர் செய்யாமல், நிர்வாக சீர்கேட்டில் ஈடுபட்டுள்ள ஊராட்சிமன்றத் தலைவர் மற் றும் அவரது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் துன்புறுத்தல்: எட்டு பேர் கைது
விருதுநகர், மார்ச் 21- விருதுநகரில் இளம் பெண்ணின் ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசா ரித்து வருகின்றனர். விருதுநகரைச் சேர்ந்த 22 பெண் ஒருவருக்கு மேலரதவீதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரது மகன் ஹரி ஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள் ளது. இருவரும் தனிமையில் இருந் துள்ளனர். அதை வீடியோ எடுத்த ஹரி ஹரன், தனது நண்பர்களிடம் காட்டி யுள்ளார். பின்னர் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளனர். இதனால், மன வேதனையடைந்த அப்பெண், விருதுநகர் புறநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் மகேந்திரன் மகன் ஹரி ஹரன்(27), மீனாட்சிநகரைச் சேர்ந்த மாடசாமி (37), செந்திவிநாயகபுரத்தைச் சேர்ந்த பிரவீன் (22), மொன்னி தெரு வைச் சேர்ந்த ஜீனத்அகமது (27) ஆகி யோர் உட்பட 15 வயது சிறுவன், 17 வய துடைய 3 சிறுவர்கள் என 8 பேரை கைது செய்துள்ளனர்.
ரயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை
விருதுநகர், மார்ச் 21- விருதுநகர் அருகே ராமசாமி புரத்தைச் சேர்ந்தவர் சோலைமீனா (22). இவர் விருதுநகர் மேலத்தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலிய ராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் ஞாயிறன்று இரவு பணிக்காக வந்த அவர், தன்னுடன் பணி புரியும் தோழி அர்ச்சனா, புவனா மற்றும் நண்பரான ஸ்டீபன் ஆகியோருடன் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து திங்களன்று பணி முடித்த சோலைமீனா வீட்டுக்குச் செல் லாமல் பட்டம்புதூர் அருகே வந்த இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண் டார். இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து தூத்துக்குடி ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இந்த நிலையில், காதலி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த சாத்தூர் அருகே மேல சிறுகுளத்தைச் சேர்ந்த காதலன் ப்ரவீண் குமார் (22), விருதுநகர் ரயில் நிலையம் அருகே குருவாயூர்-சென்னை சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
திருவில்லிபுத்தூர், மார்ச் 21- விருதுநகர் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் சேர்ந்தவர் சடை யாண்டி மகன் மணிகண்டன். இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத் துள்ளார். இதுகுறித்து திருவில்லிபுத் தூர் அனைத்து மகளிர் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து மணிகண் டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையின்போது பாதிக்கப் பட்ட சிறுமியின் தந்தை ஒரு வீடியோ ஆதாரத்தை காவல்துறையில் கொடுத் துள்ளார். இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த மணிகண்டன் சம்பவத்தன்று தனது தந்தை சடையாண்டி, தம்பி தரு மர் ஆகியோருடன் சேர்ந்து பாதிக்கப் பட்ட சிறுமியின் தந்தையை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதுகுறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் அவரது தந்தை சடையாண்டி ஆகியோரை கைது செய்த னர். தருமனை தேடி வருகின்றனர்.
அரியலூரில் நெட்பால் போட்டி துவக்கம்
அரியலூர், மார்ச் 21 - இந்திய அளவில் 21 மாநிலங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தப் போட்டியானது இன்னும் மூன்று நாட்கள் நடைபெற உள்ள நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பாரதி தாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்வம், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன், அரியலூர் எம்.எல்.ஏ கு.சின்னப்பா மற்றும் மீனாட்சி ராமசாமி கல்லூரி தாளாளர் ரகுநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கலந்து கொண்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரை வரவேற்றனர். நான்கு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் 4 அணியுடன் மோத வேண்டி யுள்ளது. நான்கு போட்டியிலும் வெற்றி பெற்ற அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், ஜெய்ப்பூர், பெங்களூர் உள்ளிட்ட 21 மாநிலங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேகதாது அணை விவகாரம் : மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கோரிய திருமாவளவன் எம்.பி.,
புதுதில்லி, மார்ச்.21- மேகதாது அணை விவகாரம் குறித்து உடனடியாக விவாதிப்பதற்காக ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று மக்களவையில் திருமாவளவன் எம்.பி கோரினார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி தாக்கல் செய்த அறிக்கையில், “தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக் கூடாது என காவிரி தீர்ப்பாய மும் உச்சநீதிமன்றமும் ஆணை பிறப்பித்தி ருக்கின்ற நிலையில், கர்நாடக அரசு அந்த ஆணையை மீறும் வகையில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு தனது நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கியுள்ளது. ஒன்றிய அரசும் இதனை ஊக்கப்படுத்து கிறது. இது வெளிப்படையாக தமிழக மக்க ளுக்கு இழைக்கப்படுகிற துரோகம். நாடாளுமன்றத்தில் மற்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு இதனை உடனடியாக விவாதிக்க வேண்டும்’’ என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேகதாது அணை விவ காரம் தொடர்பாக தமிழக சட்டப் பேரவை யில் திங்களன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுரு கன் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஒருமன தாக தமிழக சட்டப் பேரவையில் நிறை வேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
மதுரை, மார்ச் 21- கொரோனா தடுப்பு சிறப்பு மருத்து வர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டு மென வலியுறுத்தி அந்தப் பிரிவில் பணி யாற்றிய மருத்துவர்கள் மதுரை ஆட்சியர் அனீஷ்சேகரிடம் திங்களன்று மனு அளித்த னர். மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- கொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணியில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனை மற்றும் மருத்துவக் கல்லூரி நடத்திய நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டு கொரோனா பணி மருத்துவர்களாக பணி யாற்றி வருகிறோம். கொரோனா உச்சத்தில் இருந்தபோது குடும்பங்களைப் பிரிந்து இரவு பகல் பாராது வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் உள்நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து உயிரையும் துச்சமாக நினைத்து முழு மனதோடு பணி செய்துள்ளோம். கொரோனா அல்லாத பிற துறைகளிலும் (Medicine Triage , Labour Ward, Trauma, Neonatology , etc.,) தற்போது வரை பணியாற்றிக் கொண்டி ருக்கிறோம். எங்களுடைய தற்காலிகப் பணிக் காலம் மார்ச் மாதம் முடிவடையும் பட்சத்தில் எங்களது அர்ப்பணிப்பு உணர் வையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து பணி புரிய அனுமதிக்க வேண்டும். பொது சுகா தாரத் துறையில் காலி பணியிடங்களை நிரப்ப அரசு முடிவெடுக்கும் பட்சத்தில் எங் களை மருத்துவ அலுவலர்களாக நிரந்தர மாக நியமிக்க தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்ச கம் மற்றும் அரசு முதன்மை செயலாளர், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகத் திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட் டுள்ளது.