districts

img

அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்ட பேரவை

உடுமலை, நவ.27- தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலு வலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  6  ஆவது திருப்பூர் மாவட்ட பிரிதிநிதித் துவ பேரவைக் கூட்டம் உடுமலை  அன்வருல்ஹக் நினைவரங்கத்தில்    மாவட்டத்தலைவர் ராணி தலைமையில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக்தில் வேலைவாய்ப்பு அலுவல கத்தில் வேலைக்கு பதிவு செய்துவுள்ள  அனைவருக்கும் பாதுகாப்பான வேலையை உறுதிபடுத்த வேண்டும்.   புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து  பழைய ஓய்வூதியத்திட்டத்தை  அமல்படுத்த வேண்டும், சத்துணவு  அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம  உதவியாளர்கள், ஊர்ப்புறநூலகர்கள்  உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சாலைப்  பணியாளர்களின் 41 மாத பணிநீக்க  காலத்தை பணிக்காலமாக முறைப் படுத்தி பணப்பலன்களை வழங்க வேண்டும், கொரோனா காலத்தில்  முடக்கப்பட்ட அகவிலைப்படி சரண் விடுப்பு ஊதியத்தை நிலுவையுடன்  வழங்க வேண்டும், அரசுத்துறைகளில்  நிரந்தர பணியிடங்களை ஒழிக்கும்  அரசாணை 115 மற்றும் நகராட்சி, மாநக ராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை  ஒழிக்கும் அரசாணை152ஐ ரத்து செய்ய  வேண்டும்,

8ஆவது ஊதியக்குழுவில்  பரிந்துரைக்கப்பட்ட வகையில் 21 மாத  ஊதிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், பட்டு  தொழில் செய்து வரும் விவசாயிக ளுக்கு  உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுக ளுக்கு  கிலோவிற்கு ரூ100 ஊக்கத்தொ கையாக வழங்க வேண்டும், பஞ்சு  விலையை குறைத்து அதை கட்டுப்ப டுத்தி நெசவுத்தொழிலை பாதுகாக்க வேண்டும்.உடுமலை , பல்லடம், அவி னாசி அரசு கலைக்கல்லூரியில் மாணவ, மாணவியர்களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் உள் ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முன்னதாக உடுமலை அரசு ஊழியர்  சங்க அலுவலகத்தில் இருந்து பேரவ ைக்கூட்டம் நடைபெற்ற மண்டபம் வரை  பிரிதிநிதிகள் ஊர்வலமாக வந்து மறைந்த மாவட்ட துணைத்தலைவர் அன்வருல்ஹக் உள்ளிட்டவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். இந்த பேரவைக்கூட்டத்தில், அரசு  அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத் தின் மாவட்ட செயலாளர் பாலகிருஷ் ணன், வட்டக்கிளை தலைவர் தாசன்,  ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  மாநில செயற்குழு உறுப்பினர் கனக ராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநி லத்துணை பொதுச்செயலாளர் சீனிவா சன், மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரம ணியன், மாவட்ட இணைச் செயலாளர்  ராமன் வைரமுத்து, மாவட்டப்பொருளா ளர் முருகசாமி, மாவட்ட நிர்வாகிகள்   ராமசாமி, பாக்கியம், மேகலிங்கம், ராஜேஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் பங் கேற்றனர்.இறுதியாக மாநிலத்துணை தலைவர் பரமேஸ்வரி நிறைவுரை யாற்றினார்.

;