districts

img

62 பயணிகளை காப்பாற்றிய அரசு பேருந்து நடத்துநர்

மதுரை, ஜூன் 4- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அரசு பேருந்து ஓட்டுநர்  திடீ ரென மாரடைப்பால் இறந்த நிலையில், 62 பயணிகளின் உயிரை நடத்துநர் காப்பாற்றி னார். மதுரை மாட்டுத்தாவணி யில் இருந்து திருச்செந்தூர் பகுதிக்கு சென்று மீண்டும் திருச்செந்தூரில் இருந்து திருச்சி நோக்கி வெள்ளியன்று  மாலை அரசு பேருந்து புறப்பட்டது. பேருந்தை மதுரை ஐராவதநல்லூரை சேர்ந்த முகேஷ்ராஜா(54) என்பவர் ஓட்டினார். மதுரை யா.ஒத்தக்கடை அருகே உள்ள யா.நரசிங்கத்தை சேர்ந்த  திருப்பதி(39) நடத்துநராக இருந்தார். பேருந்தில் 62 பய ணிகள் இருந்தனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை அருகே பந்தல்குடி சேதுராஜபுரம் பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநர்  முகேஷ்ராஜா மாரடைப்பு ஏற்பட்டு சரிந்தார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது.  இதனால் பயணிகள் கூச்சலிட்டனர். இதை பார்த்து உட னடியாக தன்னுடைய சாமர்த்தியதால் நடத்துநர் திருப்பதி,  ஓட்டுநர் சீட்டில் அமர்ந்து பேருந்தை கட்டுப்பாட்  டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓட்டுநர்  முகேஷ்ராஜாவை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த முகேஷ்ராஜாவிற்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.  இது குறித்து பந்தல்குடி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

;