districts

img

உணவுச் செலவை உயர்த்தி வழங்கக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, செப். 26 அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டருக்கான முழுத் தொகையை வழங்க வேண்டும், இல்லையென்றால் வருடத்திற்கு நான்கு சிலிண்டர்கள் தமிழக அரசு ஏற்று வழங்க வேண்டும், அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மூன்று வருடம் பணி முடிந்த மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கு எந்தவித நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், ஐந்து வருடம் பணி முடிந்த உதவியாளர்களுக்கு நிபந்தனை இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், உணவிற்கானச் செலவுகளை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   மாவட்ட தலைவர் ஜெயராணி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் கலாவதி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரா கோரிக்கை விளக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து துவக்கவுரையாற்றினார். சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட துணை தலைவர் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிஐடியு மாவட்ட செயலாளர் ரசல் நிறைவுரையாற்றினார் மாவட்ட பொருளாளர் ஜெயலட்சுமி நன்றி கூறினார். திருநெல்வேலி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் பொதுநல சங்கம் சார்பில் மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் பிரேமா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஆர்.முருகன், மாவட்ட நிர்வாகி செண்பகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்க மாவட்ட செயலாளர் ஞானம்மாள் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சிவசக்தி, மலைபகவதி, மீனா பாய், பூங்கோதை,ராஜேஸ்வரி, கோமதி, ஓமணா, மஞ்சுளா உட்பட பலர் கலந்து கொண்டனர், மாவட்ட பொருளாளர் ஜூலிற்றா நன்றி கூறினார்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் பொதுநல சங்கம் சார்பில் மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் பிரேமா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஆர்.முருகன், மாவட்ட நிர்வாகி செண்பகம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்க மாவட்ட செயலாளர் ஞானம்மாள் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சிவசக்தி, மலைபகவதி, மீனா பாய், பூங்கோதை,ராஜேஸ்வரி, கோமதி, ஓமணா, மஞ்சுளா உட்பட பலர் கலந்து கொண்டனர், மாவட்ட பொருளாளர் ஜூலிற்றா நன்றி கூறினார்.
 

;