districts

img

வைகோ ஆவணப்படம் திரையிடல்

மதுரை, டிச.6- மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறு வனர் பொதுச்செயலாளர் வைகோவின் ஆவணப்படம் திரையிடல் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள  திரையரங்கில் நடைபெற்றது.  இதில் மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ ஆவண படத்தை திரையிட்டு தொடங்கி வைத்துப்  பேசினார். மதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர்- தெற்கு  சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் தலைமை தாங்கினார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், விசிக வடக்கு மாவட்ட செயலாளர் செல்வரசு , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், சிபிஐ மாநில கட்டுப்பாட்டு குழு வின் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு  மாவட்ட செயலாளர் மார்நாடு வரவேற்றார். இதில் பலர்  கலந்துகொண்டனர்.