districts

தீக்கதிர் செய்தி எதிரொலி திறப்பு விழாவுக்கு தயாராகும் திருவில்லிபுத்தூர் நல வாழ்வு மையம்

திருவில்லிபுத்தூர், ஜூன் 4-  தீக்கதிர் செய்தி எதிரொலியால் திருவில்லிபுத்தூர் நல வாழ்வு மையம் திறப்பு விழாவுக்கு தயாராவதாக தக வல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம்,திருவில்லிபுத்தூர் நகர் பகுதி யில் இடைய பொட்டல் தெருவில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் திறப்பு விழா காணாத நகர்ப்புற நல வாழ்வு  மையம் குறித்த செய்தி ஜூன் 1ஆம் தேதி அன்று தீக்கதி ரில் வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து ஜூன் 7  புதன்கிழமை அன்று  நகர்ப்புற நலவாழ்வு மையத்தின் திறப்பு விழா நடைபெற  இருக்கிறது. நலவாழ்வு மையத்தினை முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். பின்னர் நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் துவக்கி வைக்கிறார். ஆணையாளர் ராஜமாணிக்கம், அரசு நகர்புற, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சிந்தியா,  வட்டார சுகாதார ஆய்வாளர் ஜெயச்சந்திரன் உள் ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.