districts

மதுரை முக்கிய செய்திகள்

போடி அருகே தீக்குளித்த விவசாயி பலி

தேனி, அக்.5-  போடி அருகே தோட்டத்திற்கு சென்று தீ வைத்துக் கொண்டவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனது குறித்து  போலீசார்  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், போடி ஜமீன் தோப்பு தெருவை சேர்ந்த வர் முருகன் மகன் ஈஸ்வரன் (36). இவருக்கு சொந்த மான தென்னந்தோப்பு போடி மரிமூர் புலத்தில் உள்ளது.  ஈஸ்வரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் தோட்டத்திற்கு சென்றவர் அங்கு தனக்குத்தானே தீ  வைத்துக் கொண்டார். இவரது தம்பி சுந்தரபாண்டி அவரை மீட்டு போடி அரசு மருத்துவமனையில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரன் புதன்கிழமையன்று இறந்தார். இதுகுறித்து ஈஸ்வரன் மனைவி ஈஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போடி குரங்கணி காவல்நிலையத்தில்  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

வாகன விபத்தில்  காயமடைந்த பெண் சாவு

தேனி, அக்.5- போடி குரங்கணி மலைச்சாலையில் இரு சக்கர வாக னம் விபத்துக்குள்ளானதில் சிகிச்சை பெற்று வந்த மதுரை பெண் இறந்தார்.  மதுரை கான்பாளையத்தில் வசிப்பவர் அமிர்தராஜ் மனைவி பத்மபிரியா (44). இவரது மகள்கள் ஜீவ ஆதித்யா  (18). பத்மினி (17). பள்ளி விடுமுறை விட்ட நிலையில் மூன்று  பேரும் போடிக்கு வந்துள்ளனர். சனிக்கிழமை (அக்.1)  போடியிலிருந்து குரங்கணிக்கு ஒரே இரு சக்கர வாக னத்தில் மூன்று பேரும் சென்றுள்ளனர். வாகனத்தை பத்ம பிரியா ஓட்டியுள்ளார். மலைச்சாலை வளைவில் வேகமாக சென்று பிரேக் போட்டதில் சாலையிலிருந்த மண்ணில் வாரிவிட்டதில் இரு  சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேரும்  கீழே விழுந்து காயமடைந்தனர். மூன்று பேரும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர்.  இதில் பத்மபிரியா சிகிச்சை பலனின்றி புதன்கிழமை யன்று இறந்தார். விபத்து குறித்து பத்மபிரியாவின் தங்கை  சுலோக்சனா (42) கொடுத்த புகாரின் பேரில் குரங்கணி காவல்நிலையத்தில் விசாரித்து வருகின்றனர்.

போடியில் காணாமல் போன கல்லூரி மாணவர்   கொட்டகுடி ஆற்றில் சடலமாக மீட்பு

தேனி, அக்.5- போடியில் காணாமல் போன பொறியியல் கல்லூரி மாணவர் கொட்டகுடி ஆற்றில் செவ்வாய்க்கிழமை சட லமாக மீட்கப்பட்டார் . தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனி 3 ஆவது தெருவை சேர்ந்தவர் பிரசாத் மகன் நரேந்திரன் (20). இவர் மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் பி.இ, 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக போடிக்கு வந்த நரேந்திரன் ஞாயிற்றுக்கிழமை (அக்.2) தனது மோட்டார் பைக்கை எடுத்துச் சென்றவர் வீடு  திரும்பவில்லை. இதுகுறித்து இவரது தாயார்  மீனாட்சி (50) போடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அதன் பேரில் போலீசார்  நரேந்திரனை தேடி வந்தனர். இதனிடையே போடி குரங்கணியில் நரிப்பட்டி பகுதி யில் கொட்டகுடி ஆற்றில் கமலாட்சி கேணி என்ற இடத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மிதப்பதாக வந்த தக வலையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த னர். அப்போது இறந்து போனவர் நரேந்திரன் என்பது தெரிந்தது.  இதுகுறித்து மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில்  போடி குரங்கணி காவல்நிலையத்தில்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது தேனி,

தேனி, அக்.5- தேவாரத்தில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வரை போலீசார் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம், தேவாரம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவை  சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கௌசல்யா (20). இவரது வீட்டருகே வசிப்பவர் செபஸ்டின் மகன் பாக்கியம் (58). இவர்களுக்குள் முன் விரோதம் இருந்துள்ளது. இதனை  மனதில் வைத்து பாக்கியம், கௌசல்யா வீட்டுக்கு சென்று  ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கௌசல்யா கொடுத்த புகாரின் பேரில் தேவாரம்  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பாக்கியத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய கார்  384 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

வேடசந்தூர், அக்.5-  வேடசந்தூர் அருகே கூரியர் வேனில் மோதிய சொகுசு காரிலிருந்து 384 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலத்தில் இருந்து மதுரைக்கு கூரியர் வேன் புறப்பட்டு வந்தது. வேனை மதுரை திருநகரைச் சேர்ந்த பெருமாள்(வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். வேன், செவ்வாயன்று  அதிகாலை கரூர் - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே லட்சுமணம்பட்டியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த  கர்நாடகா பதிவு எண் கொண்ட சொகுசு கார் எதிர்பாராதவிதமாக வேனின் பின்பகுதியில் மோதி நின்றது. காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் இருந்து இறங்கிய 2 பேர் காரில் இருந்த வெள்ளை சாக்கு பையை சாலையோர பள்ளத்தில் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் வேடசந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வேடசந்தூர் காவல் ஆய்வாளர்  பாலமுருகன் தலைமையில் போலீசார் விரைந்தனர். போலீசார் வருவதை பார்த்தவுடன் விபத்து ஏற்படுத்திய காரில் இருந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிறகு போலீசார் காரை சோதனை செய்தபோது காரில் 384 கிலோ குட்கா பொருட்கள் கொண்ட மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. அதனைக் கைப்பற்றினர். இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து சொகுசு காரை பறிமுதல் செய்து தப்பி ஒடிய 2 பேரை தேடிவருகிறார்கள்.

விதியை மீறி கண்மாயில் மண் அள்ளுவதற்கு  விவசாயிகள் சங்கங்கள் எதிர்ப்பு

இன்று அதிகாரிகள் பேச்சுவார்த்தை

திருவில்லிபுத்தூர், அக்.5- விருதுநகர் மாவட்டம், தேவதானம் பெரிய கன்மா யில் அரசு விதியை மீறி மண் அள்ளுவதை தடுக்க வலி யுறுத்தி அக்டோபர் 5 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்  கம் மற்றும் தமிழக விவசாயி கள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடத்திட ஒன்று கூடினர். அப்போது காவல் துணை  கண்காணிப்பாளர் அக்டோ பர் 6 அன்று மாலை 3 மணிக்கு ஆர்டிஓ பங்கேற்கும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு  செய்வதாக உறுதியளித் தார். இதையடுத்து போரா ட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி. முருகன்,  சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் இராமர், ஒன்றி யச்செயலாளர் சந்தனக் குமார் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

காலமானார்

மதுரை, அக்.5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி மாவட்டக்குழு  உறுப்பி னர் வழக்கறிஞர் எம். ராமசாமியின்  தாயார் எம். நாகம்  மாள் (95) அவர்கள் புதனன்று மாலை காலமானார். அன்னாரது மறைவுச் செய்தி அறிந்து கட்சியினர் மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர்.  இறுதி நிகழ்ச்சி வியாழன் காலை 11 மணிக்கு மதுரை வானொலி நிலை யம் எதிரில் ஆனையூர் சாலை செல்லையா நகர் - 1 ஆவது தெருவில் உள்ள அன்னாரது இல்லத்தில் இருந்து நடை பெறுகிறது.

போடி அருகே வீடு புகுந்து  திருடிய சிறுவன் கைது

தேனி, அக்.5- போடி அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடிய சிறு வன் கையும் களவுமாக பிடிபட்டான். தேனி மாவட்டம், போடி பெரியாண்டவர்புரம் சந்தைப்  பேட்டை கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது45). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது  மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூர் சென்று விட்டார். அவரது அம்மா மட்டும் வீட்டை கவனித்து வந்தார்.  சம்பவத்தன்று அவரும் அருகில் உள்ள தனது மகள்  வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது கம்பம் சுருளிப் பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 16 வயது  சிறுவன் அவரது வீட்டின் மொட்டை மாடி வழியாக கீழே  இறங்கி வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் பீரோவை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் ரொக்கப்பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முயன்றார். அந்த நேரத்தில் ரஞ்சித்குமார் மற்றும்  அவரது மனைவி வெளியூரில் இருந்து ஊருக்கு திரும்பி னர். தங்கள் வீட்டில் நகை, பணம் திருடி வெளியே வந்த  சிறுவனை கையும் களவுமாக பிடித்து போடி நகர் காவல்   நிலையத்தில் ஒப்படைத்தனர். சிறுவனை கைது செய்த  காவல் துறையினர் நகையை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் ராணுவ வீரரை தாக்கி செல்போன், பைக்  பறிப்பு  நான்கு பேர் மீது வழக்கு

சிவகாசி, அக்.5- சிவகாசி அருகே முன்னாள் ராணுவ வீரரைத் தாக்கி  அவரிடம் இருநத செல்போன் மற்றும் இரு சக்கர வாக னத்தை பறித்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இரஜபாளையம் அருகே உள்ள முத்துச்சாமி புரத்தைச் சேர்ந்தவர் வைரக்காளை (46). இவரிடம்  சிவ காசி, கவிதா நகரைச் சேர்ந்த   கணேஷ்மணி என்பவர் போன் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். பின்பு தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். எனவே, வைரக்காளை  அங்கு சென்றாராம்.  அப்போது, அங்கிருந்த வைரமுத்து, செந்  தில்குமார், சுடலைக்குமார், கணேஷ்குமார் ஆகியோர் வைரக்காளையை தாக்கியதோடு, செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறித்துக் கொண்டதாக கூறப்படு கிறது.  இதுகுறித்து சிவகாசி நகர் காவல்நிலையத்தில் வைரக்காளை புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளைத் தேடி வரு கின்றனர்.

தோப்பூரில் நகை திருட்டு

காரியாபட்டி, அக்.5- காரியாபட்டி அருகே உள்ள தோப்பூரில் வீடு புகுந்து  நகை திருடப்பட்டது  குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள தோப்பூரைச் சேர்ந்தவர் மீனா (29). இவரது கணவர் வெளி யூர் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், மீனா வீட்டில்  தனியாக உறங்கியுள்ளார். நள்ளிரவு  வீட்டிற்குள் புகுந்த  மர்ம நபர், மீனாவின் கழுத்தில் கிடந்த மூன்றரை பவுன் தங்க நகையை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.  எனவே, இதுகுறித்து மீனா காரியாபட்டி காவல் நிலை யத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்  பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிள் -  கார் மோதல்; ஒருவர் பலி

திருநெல்வேலி ,அக் .5- கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் அந்தோணி சவரி முத்து (48). இவர் சீவலப்பேரி பகுதியில் உள்ள பர்னிச்சர்  கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் கலெக்‌சனுக்கு செல்வது வழக்கம். புதன்கிழமை கடைக்கு வந்த அவர் பின்னர் கலெக்ச னுக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பாளை கீழ நத்தம் விலக்கு பகுதியில் 4 வழிச்சாலையில் சென்ற போது, எதிரே நாகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்ட அந்தோணி சவரிமுத்து சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார். மோதிய வேகத்தில் கட்டுப் பாட்டை இழந்து பேரிகார்டு மீது மோதி நின்றது.

பிளஸ்-2 மாணவி தற்கொலை

திருநெல்வேலி, அக். 5- நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி மூலக்கோவில் தெருவில் வசித்து வருபவர் அர்ஜூனன். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். அர்ஜூனன்  வெளியூரில் தங்கி இருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பத்தமடை பகுதி யில் உள்ள ஒரு பள்ளியில் இந்தி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் ஹரினி(வயது 17) சேரன்மகாதேவியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். செவ்வாய்க்கிழமை சரஸ்வதி பூஜையையொட்டி குடும்பத்தினர் அனைவரும் அங்குள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். இரவு வீடு திரும்பிய அவர்கள் வீட்டில் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது தனக்கு தூக்கம் வரு வதாக கூறிவிட்டு மாணவி ஹரினி மாடிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.சிறிது நேரத்தில் அவரை சாப்பிட அழைப்பதற்காக அவரது தாய் மாடிக்கு சென்று பார்த்தபோது கதவு பூட்டிக்கிடந்தது. இதனால் அங்குள்ள ஜன்னல் வழியாக அவர் எட்டிப்பார்த்துள்ளார். அங்கு ஹரினி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கதவை உடைத்து ஹரி னியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்து வர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

மூதாட்டியின் வங்கிக்கணக்கில் பண மோசடி  தில்லியைச் சேர்ந்த 3 பேர் கைது

தேனி, அக்.5- தேனி மாவட்டம், போடி மெட்டு பகுதி யை சேர்ந்த கந்தசாமி மனைவி ரஞ்சிதம் (வயது78). இவர் தனது மகள் ஸ்ரீதேவி மற்றும் பேரன், பேத்தியுடன் வசித்து வரு கிறார். கடந்த ஜூலை  6 ஆம் தேதி ரஞ்சித்  தின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.  வந்தது. அதில் உங்களது கணவர் எல்.ஐ.சி.யில் இன்சூரன்ஸ் போட்டுள்ளார். அது முதிர்வு அடைந்து விட்டதால் அந்த தொகை ரூ.37,041, உங்கள் வங்கி கணக்  கில் வரவு வைக்கிறோம் என்று கூறி, வங்கி  கணக்கு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்டு அதன் மூலம் 5 தவணைகளாக ரூ.1  லட்சத்து 49 ஆயிரம் பணத்தை அபேஸ்  செய்துள்ளனர். இதனை அறிந்த ரஞ்சிதம் தேனி சைபர் கிரைம் காவல்  நிலையத்தில் புகார் அளித்தார்.  சைபர் கிரைம் காவல்  ஆய்வாளர்  அரங்கநாயகி தலைமையில் 3 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டது.  ரஞ்சிதத்துக்கு அழைப்பு விடுத்த எண் மற்றும் எந்த வங்கி கணக்கில் பரி மாறப்பட்டது என விசாரணை நடத்தியதில்  தில்லியைச் சேர்ந்த 3 பேர் இதில் ஈடு பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து தில்லிக்கு சென்ற காவல்துறையினர்  வில்சன்குமார் (27), முருகன் (26), சதா சிவம் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், வங்கி புத்தகம், ரொக்கப் பணம் ரூ.1 லட்  சத்து 49 ஆயிரம் ஆகியவற்றை கைப்பற்றி னர்.


 

 

;