districts

img

போலி மருத்துவர்களை ஒடுக்க வேண்டும்!

மதுரை, ஆக.6- தென்காசியில் ஒருவர் மருத்து வமனை நடத்திவந்துள்ளார். ஆனால், அவர் ஆங்கிலவழி மருத்துவம் பார்ப்பதற்கு தகுதி யற்றவர் எனத் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்று வருகிறது.

போலி மருத்துவர்கள் தொடர் பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றக்கிளை மதுரை நீதிபதி கே. முரளிசங் கர், குற்றம்சாட்டப்பட்டுள்ள மனுதாரர் தகுதி வாய்ந்த மருத்துவர் இல்லை. சில தகுதி வாய்ந்த மருத்துவர்கள் சில நாட்கள் மட்டுமே மருத்துவ மனைக்குச் செல்வது வழக்கம். குற்றம்சாட்டப்பட்டுள்ள மனு தாரர் தேவையான தகுதிகள் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவ ரது மருத்துவச் சான்றிதழை ஆய்வுக்குட்படுத்திய போது அவர் ஒரு ‘எலக்ட்ரோ ஹோமி யோபதி என்பது தெரியவந்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கபடு கிறது. மனுதாரர் நோயாளி களுக்கு அலோபதி சிகிச்சை அளித்ததை அதிகாரிகள் அறிந்த பிறகும், அபராதம் மட்டும் விதித்துள்ளனர். 

சிலர், பல்வேறு இந்திய மருத்துவ முறைகளின் கீழ் வழங்க ப்பட்ட டிப்ளமோ சான்றிதழ்களின் உதவியுடன் தங்களை மருத்து வப் பயிற்சியாளர்கள் என்று அழைத்துக் கொண்டு, அலோபதி மருத்துவ முறையைப் பயிற்று விப்பது கடுமையான பிரச்சனை யாகும். இதுபோன்ற போலி மருத் துவர்கள் அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடுகிறார்கள் எனக் கண்டித்தார். 

மேலும் குற்றம்சாட்டப்பட்ட மனுதாரர் மீது உரிய விசாரணை நடத்தி அவர் ஆங்கில வழி மருத்துவம் பார்க்கத் தகுதியற்ற வர் என்றால் அவர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.