districts

செயல் அலுவலர் நிலை 4 தேர்வு: ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்!

சென்னை,செப்.1- செயல் அலுவலர் நிலை 4-இல் அடங்கிய காலிப் பணியிடங்களுக்கான தேர்வு  வரும் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறு கிறது. இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கான ஹால்டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘செயல் அலுவலர் நிலை 4 பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு கொள்குறிவகையின் மூலம் செப்டம் பர் 11ஆம் தேதி காலை, மாலையில் நடைபெற உள்ளது. இந்தத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in , www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே  விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகிய வற்றைப் பதிவு செய்து ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என  அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.