districts

img

ஊதிய உயர்வு கோரி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, டிச. 1- மின்வாரிய ஊழியர்க ளின் தேங்கி உள்ள பிரச்ச னைகள், ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்பு தல்,அவுட்சோர்சிங் விடு வதை கைவிட கோரியும் ஒப்பந்த தொழிலாளர் மற்றும் பகுதிநேர ஊழியர்க ளை நிரந்தர படுத்த வேண்டும் என்று கோரியும்   பாளையங்கோட்டை கேடிசி நகர் மின்வாரிய அலுவல கம் முன்பு வியாழக்கிழமை மதியம் உணவு இடை வேளையில் சிஐடியு மின்  ஊழியர் மத்திய அமைப்பி னர் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கோட்ட செயலாளர் பால சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கோரிக்கை களை விளக்கி திட்ட செய லாளர் கந்தசாமி பேசினார், ஆர்ப்பாட்டத்தில் ஏராளமா னோர்  கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி  

அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்க ளுக்கு 1.12.2019 ஆண்டு முதல் வழங்கப்படாத ஊதிய உயர்வை உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி வழங்க கோரி   டிசம்பர் 1ஆம் தேதி காலை 9 மணி அளவில் தூத்துக்குடி அனல் மின் நிலையம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமை ப்பு சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.   தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு தெர்மல் செயலாளர் கண பதி சுரேஷ் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் அப்பாதுரை சிறப்புரையாற்றினார். இதில் மாநில செயற்குழு உறுப்பி னர் செல்வி, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு ஆல்பர்ட் ரதி, திட்ட துணைத் தலைவர் பொன்ன ழகு, நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;