districts

img

வாரிய உத்தரவு எண் 2-ஐ ரத்து செய்க! மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

திருநெல்வேலி, செப். 26- 23 சலுகைகளை பறிக்கின்ற இ.பி நம்பர் 2ஐ  உடனடியாக ரத்து  செய்ய வேண்டும், தமிழகம் முழு வதும் காலியாக உள்ள 56 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் , புதிய துணை மின் நிலையங்களுக்கான உரிய பதவிகளை அமைத்திட வேண்டும், 3 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள சரண்டர் ஊதியத்தை உட னடியாக வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைக ளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திங்கட்கிழமை  பாளை தியாக ராஜ நகர் பகுதியில் உள்ள மின்வா ரிய மேற்பார்வை பொறியாளர் அலு வலகத்தில்  முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஒருங்கி ணைந்த நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காத்தி ருப்பு போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ மின் ஊழியர் மத்தியமைப்பு  சங்க திட்ட செயலாளர் கந்தசாமி தலை மை தாங்கினார், கோரிக்கைகளை விளக்கி சங்கத் திட்ட தலைவர் பீர் முகம்மது ஷா,டி.என்.இ. டபிள்யு எப் நிர்வாகி கண்ணன், பொ றியாளர் முருகன், அண்ணா தொழிற்சங்க மின்சார பிரிவு கருப்ப சாமி, டாக்டர் அம்பேத்கர் யூனியன் சிவகுமார், மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் தென்கரை மக ராஜன், ராமச்சந்திரன், கிருஷ்ணன், கார்த்திகேயன், நல்லதுரை சார்லஸ், பழனி குமார், அர்ச்சுனன், முத்தையா, அக்னிராஜ்,முத்து ராஜ், முத்துக்குமார், சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு நிர்வாகிகள் வண்ணமுத்து ,அயூப் கான், பூலுடையார், தளபதி,  ஓய்வு பெற்ற நிர்வாகிகள் ராஜா மணி,கருப்பையா உட்பட  ஏராள மானோர் பேசினர்.

தூத்துக்குடி

தமிழக முழுவதும் மின்சார வாரிய ஊழியர்களை பாதிக்கும் வகையில் செயல்படுத்தப் பட்டுள்ள வாரிய உத்தரவு எண் 2 ரத்து செய்ய வேண்டும்.பஞ்சப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் மின்சார வாரிய பணிகளில் அவுட் சோசிங் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையில் வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். இதன் அடிப்படையில் தூத்துக் குடியில் மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு மின்சார  வாரிய ஊழியர்கள் பொறியாளர் கள் என அனைத்து தொழிற்சங்கம் சார்பாக சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் மரியதாஸ் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் டிஎன்இபி எம்ப்ளாயிஸ் ஃபெட ரேஷன் சார்பில் அலெக்சாண்டர், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் வினோத், பொறி யாளர் கழகம் சார்பில் உமைய ரோபகம், பொறியாளர் சங்கம் சார்பில் ரெமிங்டன், ராயன், என்எல்ஒ சார்பில் மாதவன், அண்ணா பொது தொழிலாளர் சங்கம் சார்பில் முருகன், ஏ இ எஸ் யு சார்பில் வேல்முருகன், டாக்டர் அம்பேத்கார் எம்ப்ளாய் யூனியன் சார்பில் சண்முகசுந்தரம், மின்சார தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;