districts

img

தேர்தல் விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி,பிப். 14 தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிக்கும் பொருட்டு மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு பிரச்சார பேரணி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தொடங்கி பாளை யங்கோட்டை ரோடு வழியாக மாநகராட்சி அலுவலகம் வரையில் நடைபெற்றது. பேரணியை ஆட்சியர் செந்தில் ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார். விழிப்புணர்வு பிரச்சார பேரணியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சு.சிவசங்கரன், பேச்சுப் பயிற்சியாளர் ராஜேஸ்வரி, கை கால் பாதிக்கப்பட்டோர் சங்கம் பேர்சில், மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஜெய ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.