districts

img

பயோமெட்ரிக் முறை குளறுபடியால் ரேசன் பொருட்கள் வாங்க மக்கள் அவதி

நடவடிக்கை கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம் தேனி, பிப்.2- நியாய விலைக்கடைகளில் பயோமெட்ரிக் முறை குளறுபடி யால் ரேசன் பொருட்கள் வாங்க  முடியாமல் மக்கள் அவதிப்படு வதாகவும் குறைபாடுகளை களைய வேண்டும் என வலி யுறுத்தி சிஐடியு கூட்டுறவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தேனி ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பில்  போடும் போது குடும்ப அட்டை தாரர்களின் கைரேகை பல நேரங்க ளில் பதிவாகாமல், பொதுமக்க ளுக்கும் ஊழியர்களுக்கும் பிரச் சனை ஏற்படுகிறது. மேலும் சர்வர்  பிரச்சனையால் பொருட்கள் வழங்க முடியவில்லை. எனவே பயோமெட்ரிக் குறைபாடுகளை களைய வேண்டும் .சில குடும்ப  அட்டைகளில் இருமுறை பில் போடுவதை ரத்து செய்து ஒரு  முறை பில் போடும் நடை முறையை கடைபிடிக்க வேண்டும். 4 விதமான அரசி வழங்குவதால் கடைகளில் பிரச்சனை எழுகிறது.எனவே தரமான அரிசி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தேனி ஆட்சியர் அலுவலகம்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட செயல்  தலைவர் டி.பிச்சைமணி தலைமை  வகித்தார். மாவட்ட செயலாளர் பா. செந்தில் காமு முன்னிலை வகித்  தார். சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் எம்.ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் பி.கருப்ப சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர் .சிஐடியு தேனி மாவட்ட தலைவர் டி.ஜெயபாண்டி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.சண்முகம், சிஐடியு மாவட்ட உதவி தலைவர் எஸ்.பொம்மையன்,தையல் தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் ஏ.சி.காமுத்துரை, வாலிபர் சங்க தாலுகா செயலாளர் டி.நாக ராஜ் ஆகியோர் ஆதரித்து பேசி னர். மாவட்டக்குழு உறுப்பினர் ராம கிருஷ்ணன் ,டி. ரவி சி.சிவம் சி.வீரேஸ்வரன்.ஜெ.ஜெயந்தி, கே.சசிக்குமார் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டு முழக்க மிட்டனர்.

;