districts

img

ஆண்டிபட்டி -தேனி ரயில் பாதையில் ரயில் இன்ஜினை இயக்கி ஆய்வு

தேனி, ஜன.28- மதுரை-தேனி அகல ரயில் பாதை நிறைவடைந்து, பாதுகாப்பு ஆணையர் ஜனவரி 31 ஆம் தேதி ஆய்வு செய்ய உள்ள நிலையில் வெள்ளியன்று முன் னோட்டமாக ரயில் இன்ஜினை இயக்கி ஆய்வு செய்யப்பட்டது. போடி-மதுரை வழித்தடத்தை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி ரூ.450 கோடி மதிப்பீட்டில் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கியது. இதற்காக 2010 டிசம்பரில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.  90 கிமீ. தூரம் உள்ள இப்பாதை மது ரையில் இருந்து உசிலம்பட்டி, ஆண்டி பட்டி, தேனி, போடி என்று நான்கு கட்டங்க ளாக பணிகள் நடந்தது. தற்போது மது ரையில் இருந்து தேனி வரை பணிகள் முடிந்துள்ளன. ஆண்டிபட்டி வரை சோ தனை ஓட்டம் முடிந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை ரயில் இன்ஜினை 120கிமீ. வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஜனவரி 31-ம் தேதி தென்னிந்திய ரயில்வே முதன்மை பாது காப்பு ஆணையர் அபய்குமார்ராய் ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை ரயிலை இயக்கி சோதனை செய்ய உள்ளார். பின்பு ரயில்களை இயக்க அனுமதி அளிப்பார். இதற்கு முன்னோட்டமாக வெள்ளி யன்று ரயில் இன்ஜினை ஆண்டிபட்டியில் இருந்து தேனி வரை இயக்கி சோதனை செய்யப்பட்டது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ஏற்கனவே ரயில் இன்ஜின் சோதனை முடிந்துள்ளது. வரும் 31-ம் தேதி ரயில்வே ஆணையர் வர உள்ள தால் முன்னோட்டமாக இஞ்சினை 80 முதல் 100கிமீ. வேகத்தில் இயக்கி சோ தனை செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

;