districts

கஞ்சா, குட்கா விற்றால் கடும் நடவடிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

தென்காசி, ஜூலை 2- தென்காசி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்ப னையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், கஞ்சா விற்பனையை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டில் இதுவரை சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த தாக 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 106 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து விற்பனைக் காக வைக்கப்பட்டிருந்த 49.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.  தொடர் கஞ்சா விற்பனை செய்ததாக இதுவரை 14 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கஞ்சா விற்பனை செய்த வர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 37 நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கப் பட்டுள்ளன.  சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்ததாக 409 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 429 நபர்கள் கைது  செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2340 கிலோ புகை யிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, புகை யிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களின் கடைக ளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் மூலம் 2,95,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு 49 கடைக ளுக்கு  சீல் வைக்கப்பட்டுள்ளது.  மேலும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இதுவரை 66 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 

;