சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஏப்ரல் 22 அன்று மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.