மதுரை, மே 9- ஒன்றிய அரசு இலங்கை அரசி டம் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை சிறையில் உள்ள 12 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தொழிற் சங்கங்களைச் சேர்ந்த மீனவர் சங்கத்தினர் திங்கள்கிழமை தெரி வித்தனர். இதுகுறித்து செய்தியாளர் களிடம் பேசிய மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜா, இராமேஸ் வரத்தில் இருந்து மார்ச் 23-ஆம் தேதி 12 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அவர்கள் மீன்பிடித் துக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் தங்களது கடல் எல்லைக்குள் நுழைந்து அத்து மீறி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். கடந்த மார்ச் மாதம் மண்டபத் தில் இருந்து நான்கு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற போது, இலங்கை கடற்படை யினர் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இலங்கை நீதிமன்றம் அவர் களை விடுவித்துள்ளது, ஆனால் அவர்கள் இன்னும் சொந்த ஊருக்கு வந்துசேரவில்லை. இது தொடர்பாக ஒன்றிய அரசி டம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினார். 2019-ஆம் ஆண்டு முதல் 100-க்கும் மேற்பட்ட இயந்திரப் படகுகள் இலங்கைக் கடற்படை யினரால் பறிமுதல் செய்யப்பட் டன. இலங்கையிடமிருந்து அவைகளை மீட்டுத் தருமாறு பலமுறை வேண்டுகோள் விடுத் தும் இதுவரை எங்களது கோரிக்கை நிறைவேறவில்லை. இந்தச் சூழ்நிலையில், இலங்கை அரசு படகுகளை ஏலம் விட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது, எனவே ஒன்றிய அரசு உடனடியாக மீனவர்களின் பிரச்னையை இலங்கை அதி காரிகளிடம் எடுத்துக் கூறி, ஏலத்தை நிறுத்தவேண்டும். படகுகளை தமிழகத்திலுள்ள உரிமையாளர்களிடம் ஒப்ப டைக்க வேண்டும். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் சிலர் இலங் கைச் சிறையில் வாடும் மீன வர்களை பாதுகாப்பாக மீட்டுத் தாருங்கள் என கைகூப்பி வேண் டுகோள் விடுத்தனர்.