சிவகங்கை, மார்ச் 28- விதிகளுக்கு புறம்பாக முறைகேடாக வழங்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதலை கண்டித்து தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிவ கங்கை மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசப் ரோஸ், ஞான அற்புதராஜ், கும ரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலா ளர் முத்துப்பாண்டியன் விளக்கிப் பேசினார். மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ் கண்டன உரையாற்றி னார். மாநில தலைவர் மணிமேகலை சிறப்புரையாற்றி னார்.