districts

img

மதுரை - தேனி மெயின் ரோட்டில் பாலப்பணியால் தூசிகள்; மக்கள் அவதி

மதுரை, மே 24-  மதுரை - தேனி மெயின் ரோட்டில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட  பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்து அதற்கான பணிகளை துவங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது.  இராமேஸ்வரத்தில் இருந்து கொச்  சின் வரையிலான தேசிய நெடுஞ்சாலை மதுரை வழியாக செல்கிறது. ஏற்க னவே மதுரை -இராமநாதபுரம் வரை  நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்  ளது. மதுரையில் இருந்து தேனி வரை யிலான தேசிய நெடுஞ்சாலையும் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, உசிலம்பட்டியில் இருந்து நாகமலை புதுக்கோட்டை வரை சாலை விரிவாக் கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் தேனி மெயின் ரோட்டில்,  காளவாசல் முதல் முடக்குச்சாலை வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் விராட்டிபத்து, அச்சம்பத்து  பகுதியில் சாலை மிகவும் குறுகியதாக  உள்ளது. இந்த பகுதியில் சாலை விரி வாக்கம் செய்ய முடியாத சூழ்நிலையில்  இந்த 2 ஊர்களுக்குள் செல்லாமல் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு, புறவழிச்  சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத் தப்படுகிறது. தேனி மெயின் ரோட்டில் டிவிஎஸ் நிறுவனத்தை அடுத்து டிபிஎம் நகர் அருகே துவங்கி, விருதுநகர்- திண் டுக்கல் நான்கு வழிச்சாலையில் இணைத்து, அங்கிருந்து நாகமலை புதுக்கோட்டையை சென்றடைகிறது. இந்த நான்கு வழிச்சாலையில், முடக் குச்சாலையில் இருந்து, டிபிஎம் நகர்  வரை அதிகமான வளைவுகள் மற்றும்  இணைப்புச்சாலைகள் இருப்பதால், உயர்மட்ட பாலம் கட்ட முடிவு செய்யப்  பட்டது. இந்த உயர்மட்ட பாலம், தேனி மெயின் ரோட்டில், பி.பி.சாவடியில் இருந்து, விராட்டிபத்து டிபிஎம் நகர் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பாலம் 2020 - 2021 ஆம் ஆண்டு  ரூ.53. 95 கோடி செலவில் ஒன்றிய அரசின்  தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்  டத்தில் பணி நடைபெறுகிறது. இந்நிலை யில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  பாலம் கட்டுமான பணிகள் முடிக்கப்பட  உள்ளதாக திட்ட அறிக்கை வெளியிடப்  பட்டுள்ளது.  இது குறித்து முடக்குச்சாலை பகுதி யில் உள்ள மக்கள் கூறுகையில், இந்த  இடத்திற்கு தற்போது பாலம் தேவை யில்லை. பாலம் அமைத்தாலும் காள வாசல், அரசரடி பகுதிகளில் போக்கு வரத்து நெருக்கடி குறையப்போவ தில்லை. பாலப்பணியின் போது தொட ர்ந்து குடிநீர் குழைகள் உடைக்கப்பட்டு வருகிறது. இதனால் சாலை முழுவதும்  தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெருக் கடி ஏற்படுகிறது. தேனி, உசிலம்பட்டி, விக்கிரமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்து அவசரமாக வரும் ஆம்பு லன்ஸ்கள் கூட முடக்குச்சாலை பகு திக்கு வரும் இடத்தில் போக்குவரத்து நெருக்கடியால் ஊர்ந்து செல்ல வேண்  டிய நிலை உள்ளது. பாலம் அமைக்கும் முன் சாலைகள் போடப்பட்டு போக்கு வரத்து நெரிசலை குறைக்க வழி செய்ய வில்லை. தூசி படியும் இடமாக முடக்கு சாலை பகுதி மாறியுள்ளது. பாலப்பணி கள் முடிய ஒரு வருடம் ஆகும் என்று அதி காரிகள் கூறுகிறார்கள். அதற்கு முன் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை குறைக்கவும், தூசியில் இருந்து மக்  களை பாதுகாத்திட சாலை அமைக்கப் பட்டால் பெரும் பயனாக இருக்கும் என்று தெரிவித்தனர்.

டீக்கடை, உணவகங்களுக்கு பாதிப்பு

முடக்குசாலை முதல் எச்எம்எஸ் காலனி சந்திப்பு வரையுள்ள இப்பகு தியினை சேர்ந்த உணவகம் மற்றும் டீ கடை வைத்துள்ளவர்கள் கூறுகை யில், கடுமையான போக்குவரத்து நெருக் கடி மற்றும் தூசிகள் பரவுவதால் ஹோட்  டலுக்கு வரும் நபர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்றனர். முடக்குசாலை அருகில் உள்ள பெரிய உணவக காவலாளி கூறுகை யில், பாலம் கட்டுமானப்பணி நடைபெறு வதால் தூசி அதிகளவில் பரவுகின்றது. இதனால் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை வெகு வாக குறைந்து விட்டது. வாகனங்க ளும் நிறுத்த முடியவில்லை . வரு கின்ற வாடிக்கையாளர்களும் உணவு  அருந்த முடியாத சூழ்நிலை உள்ளது  உணவகத்திற்கு வரும் குழந்தைகளை கவரும் வகையில் சிறிய பூங்கா ஒன்று இங்கு அமைக்கப்பட்டு இருந்தது. அது வும் தற்போது மூடப்பட்டுள்ளது. சாலை  அமைப்பது குறித்து ஒப்பந்ததாரரிடம் கூறினால், செவி சாய்ப்பது இல்லை. அதிகாரிகளிடம் கூறுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்கள் என்று தெரிவித்தார். 

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

எச்.எம்.எஸ் காலனி எதிரே உணவ கம் வைத்துள்ள சுரேஷ் என்பவர் கூறு கையில், இந்தப் பகுதியில் போக்கு வரத்து நெருக்கடியே ஏற்படாது. பாலம் கட்டும் முன் சாலை போட வேண்டும்.  அதைச் செய்யாமல் பாலம் கட்டு கின்றோம் என்ற பெயரில் குடிநீர் மற்றும்  கழிவு நீர் குழாய்களை உடைத்து விட்  டார்கள். இதனால் அடிக்கடி குடிநீரும் கழிவு நீரும் வெளியேறி அதிக அள வில் கடைமுன் தேங்கி விடுகிறது. இத னால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. உணவகத் திற்கு யாரும் வருவதில்லை. தொடர்ந்து நாங்கள் அதிகாரிகளை சந்தித்து சாலை கள் அமைக்க வேண்டும் என்று கூறினா லும் அவர்கள் அதை கண்டுகொள்ளாத போக்கிலேயே உள்ளனர் என்று கூறி னார். டோக் நகர் பகுதியினை சேர்ந்த செல்வராஜ் என்பர் கூறுகையில், டோக்  நகர் பகுதி மிகவும் அமைதியான, அதி காலையில் அதிகளவில் மக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் பகுதியாக இருந்தது. தற்போது பி. பி. சாவடி சாலை யிலிருந்து எச். எம். எஸ். காலனி வரை  பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருவதால் தேனி மெயின் ரோடு வழி யாக வரும் சிறிய வாகனங்கள் இப்பகுதி வழியாகத்தான் செல்கிறது. இதனால்  இப்பகுதியில் வாகன இரைச்சல் சத்த மும் போக்குவரத்தும் அதிகரித்துவிட் டது. வீடுகள் முழுவதும் தூசிகள் அதி கரித்துவிட்டது. சாலைகளும் மிகவும் மோசமாகிவிட்டது. போக்குவரத்து நெரி சலை குறைக்கவும் சாலைகளை சீர மைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும் கூட அதைப்  பற்றி மாநகராட்சி நிர்வாகமும் மற்ற அதி காரிகளும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிவித்தார்.        (ந.நி)
 

 

;