districts

கோட்டகுப்பம் நகராட்சியில் சிபிஎம் வெற்றி

விழுப்புரம், பிப்.22- விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சியில் 18வது வார்டில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் பர்கத் சுல்தானா வெற்றி பெற்றார்.  பதிவான 692 வாக்குகளில் 178 வாக்குகள்  பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரை தோற்கடித்தார். பர்கத் சுல்தானாவுக்கு விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.