திண்டுக்கல், மார்ச் 27- திண்டுக்கல நத்தம் சாலையில் கொடிமரத்தை இடித்து விட்டு சென்றதையடுத்து குட்செட் லாரிகளை சிறை பிடித்து சிபிஎம் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் ரயில் நிலையம் குட்செட்டிலிருந்து லாரி கள் மூலம் பழனி சாலையில் உள்ள கிட்டங்கிகளுக்கு அரிசி, கோதுமை உரங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்வது வழக்கம். இந்த லாரிகள் நட மாட்டத்தால் பெரும் விபத்துகள் அவ்வப்போது நடைபெறு வது வழக்கம். அவ்வப்போது மக்கள் இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள். போலீசார் சமாதானம் செய்து அனுப்பிவிடுவார்கள். இது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில் திங்களன்று மேம்பாலம் அருகில் உள்ள சிபிஎம் கொடி மரத்தை குட்செட் லாரி ஒன்று மோதி நிற்காமல் சென்றுவிட்டது. இதனையடுத்து கொடி மரத்தில் மோதிய லாரியை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி சிபிஎம் சார்பில் மற்ற லாரிகளை சிறை பிடிக்கும் போராட் டம் நடத்தப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தையடுத்து தெற்கு காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பினர். கோடி மரத்தில் மோதிய லாரியை கைப்பற்றி காவல்நிலை யத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சிபிஎம் நகரச் செயலாளர் அரபுமுகமது, மாமன்ற கவுன்சிலர் ஜோதிபாசு ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.