தென்காசி, நவ. 23- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மரு தம்புத்தூர் ஊராட்சியில் நூறுசதவீத வீட்டு வரி உயர்வை ரத்துசெய்திட வேண்டும், மருதம் புத்தூர், கண்டபட்டி கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் தாமிரபரணி குடிநீர் வீட்டு நல்லி இணைப்பு வழங்கிட வேண்டும், மருதம்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலை யத்தை 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்திட வேண்டும், சிவலார்குளம் வழியாக செல்லும் சிற்றாற்று தண் ணீரை கால்வாய் அமைத்து மருதம்புத்தூர் மறவன் குளத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்திட கோரு தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மருதம் புத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா குழு உறுப்பி னர் நல்லையா தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பத்திரகாளி,மாடசாமி,வள்ளியம்மாள்,முத்துகனி, சந்தனகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குணசீலன் துவக்கி வைத்தார்.தாலுகா குழு உறுப்பினர்கள் பாலு, கனகராஜ் பரம சிவன் வெற்றிவேல் உரை யாற்றினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கண பதி நிறைவுரை ஆற்றினார்.