மதுரை, பிப்.16- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மதுரை மாநகராட்சி 71-ஆவது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் விடு தலை சிறுத்தை கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வி.பி.இன்குலாப் என்ற முனி யாண்டியை ஆதரித்து விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவள வன் எம்.பி. பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில குழு உறுப்பினர் சி.ராம கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பிரச்சா ரம் செய்தனர்.