districts

img

38 அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் இடமாற்றம்

நாகர்கோவில், டிச. 4- நாகர்கோவில் மண்டலத்தில் இருந்து 38 ஓட்டுநர்களை திருநெல் வேலி மண்டலத்திற்கு இடமாற்றம் செய்திருப்பது முறையான நடவ டிக்கை எனவும், ஓட்டுநர் பற்றாக் குறையை சீர்செய்ய புதிய ஓட்டுநர் கள் நியமனம் செய்யப்பட வேண்டும் எனவும் சிபிஎம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கட்சியின் குமரி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்ல சுவாமி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது:  நாகர்கோவில் மண்டலத்தில் இருந்து 38 ஓட்டுநர்கள் திருநெல் வேலி மண்டலத்திற்கு இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளனர். போக்கு வரத்து அமைச்சர் அந்த மாவட்டத் திற்கு பொறுப்பு எனவும், அவர் பொது மக்களை சந்திக்கும் போது பேருந்து வசதி கேட்கின்றனர். இத னால் பேருந்தை இயக்க அங்கு நில வும் ஓட்டுநர் பற்றாக்குறையை சரி செய்ய நாகர்கோவில் மண்டலத் தில் இருந்து ஓட்டுநர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இப்போது நாகர்கோவில் மண்டலத்தில் இராணித் தோட்டம் 1,2,3, செட்டிகுளம், கன்னியாகுமரி, வீகோபுரம் பணிமனைகளில் பணி புரிய குழித்துறை 1,2, மார்த்தாண் டம், திருவட்டார் பணிமனைகளில் இருந்து ஓட்டுநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது எப்படி சரியாக இருக்கும்.  ஏற்கனவே இந்த பணிமனை களில் ஓட்டுநர் பற்றாக்குறையால் பேருந்துகள் ஓடவில்லை. திருநெல் வேலி மண்டலத்தில் மட்டும் பேருந்து கள் ஓடினால் போதாது, நாகர் கோவில் மண்டலத்திலும் அனை த்து பேருந்துகளையும் இயக்க போதுமான ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

;