districts

img

போக்குவரத்து பூங்காவை தனியார் வசம் ஒப்படைக்க சிபிஎம் கவுன்சிலர் எதிர்ப்பு

தூத்துக்குடி, டிச,01- போக்குவரத்து பூங்காவினை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு மாமன்ற கூட்டத்தில் சிபிஎம் கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணை மேயர்  ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னி லையில் நடைபெற்றது. கூட்டத்தில் கவுன்சி லர்கள் தங்களது பகுதிகளில் உள்ள சாலை, கால்வாய், குடிநீர், ஆக்கிரமிப்பு, பூங்கா பாராமரித்தல், மழைநீர் அகற்றுதல் போன்ற குறைகள் குறித்து தெரிவித்தனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சிபிஎம் 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்து மாரி   பேசியது : தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலம் வ.உ.சி கல்லூரி அருகில் அமையப் பெற்றுள்ள போக்குவரத்துக் பூங்காவினை பராமரிப்பு செய்வதற்கு தனியார் நிறுவனத்தின் வசம் ஒப்படைக்க கூடாது என  எதிர்ப்பு தெரிவித்து

சிபிஎம் கவுன்சிலர் கோரிக்கை மனுவை மாநக ராட்சி மேயரிடம் வழங்கினார். மேலும் 43 வது வார்டு பகுதியில் அமையப்பெற்றுள்ள காமராஜ் சாலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது அந்த சாலையில் ஆடு, மாடுகள், நாய்கள் பெருமளவில் சாலை பகுதியில் சுற்றி திரிவதால் அடிக்கடி பெருமளவில் விபத்து ஏற்படுகிறது, எனவே மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு ஆடு, மாடு, நாய்களை அப்புறப்படுத்த வேண்டும், 43 வது வார்டு பகுதியில் சுமார் 15 இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் பெருமளவில் வீணாகி றது. அந்த உடைப்பை சரி செய்ய முடியவில்லை எனவே இப்பகுதிக்கு புதிய குடிநீர் குழாய் இணைப்புகளை மாற்றி வழங்க வேண்டும், சிவந் தாகுளம் நகராட்சி பள்ளி அருகில் உள்ள பொதுக் கிணறு அப்பகுதி மக்களின் ஈமச்சடங்கு செய்வ தற்கு பயன்பட்டு வந்தது, தற்போது அந்த கிணறு துர் நாற்றம் வீசுகிறது. அதை சுத்தம் செய்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார் கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகை யில் “தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டுகளில் உள்ள குறைகள் முழுவதுமாக தீர்க்கப்படும். நிதி நிலைமைக்கு ஏற்ப பணிகள் நடைபெற்று வரு கிறது. பல பகுதிகளில் புதிய சாலைகள் அமைக் கப்பட்டு வருகின்றன. பிரதான தேசிய நெடுஞ் சாலை பணிகள் நடைபெறவுள்ளன. பொதுமக்க ளின் நலன் கருதியே மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பல ஆக்கிரமிப்புகள் அகற் றப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு வந்த பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.

;