districts

img

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவிக்கு சிபிஎம் வாழ்த்து

திருவண்ணாமலை, பிப். 11- திருவண்ணமலை மாவட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர் திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளாறு அருகே குண்ணகம்பூண்டி அரசுப் பள்ளியில் பயின்று, நீட் தேர்வை எதிர்கொண்டு, தற்போது மருத்துவம் பயில கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவி கஸ்தூரியை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். தொண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயத் தொழிலாளி கேசவன். இவரது மகள் கஸ்தூரி நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணம் கூட செலுத்த முடியாத ஏழ்மை நிலையிலும், நீட்தேர்வில் 233 மதிப்பெண் பெற்று, 7.5 விழுககாடு ஒதுக்கீட்டில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. இதையடுத்து சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஜா.வே.சிவராமன், இடைக்குழு உறுப்பினர் ச.தங்கமணி, தெள்ளாறு செயலாளர் த.மூர்த்தி, பாண்டியன் ஆகியோர், மாணவியையும், அவரது குடும்பத்தினரையும், பள்ளி ஆசிரியர்களையும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்பேது, மாணவி கூறுகையில், என்னை போல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு பள்ளியில் என்னுடன் கல்வி பயின்றனர். ஆனால் என்னை போன்று ஓரிருவர் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவப் படிப்புக்கு செல்ல முடிந்தது. ஆனால் ஆயிரக்கணக்கான ஏழை குடும்பத்தைச் சேர்ந்த, மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்து விட்டது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதே, என்னைப்போன்ற ஏழை, எளிய மாணவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்றார். மேலும் மருத்துவக் கல்வி பயின்று சமூக அக்கறையுடன் கிராமப்புறத்தில் மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றும் தெரிவித்தார்.