தேனி, பிப்.2- தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி 18 வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் ஜி.பி.முருகன் புதனன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மனுத்தாக்கலின் போது கட்சியின் ஏரியா செயலாளர் பி.ஜெயராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் பி.ஜெயன், முத்துசாமி, பழனிச் சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.