சென்னை,செப்.1- சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியார் சிலையை அடித்து நொறுக்கவேண்டும் என்று பேசினார். இதனால் அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அத னடிப்படையில் கனல் கண்ணன் கைது செய்யப் பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்ற மும், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற மும் தள்ளுபடி செய்தன. அதன்பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் கனல் கண்ணன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு ஆகஸ்ட் 29ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இந்த மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிடப் பட்டது. அதன்பின் இந்த மனு மீண்டும் வியாழனன்று (செப்.1) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நீங்கள் ஒரு கட்சியில் இருக்கும் போது மாற்று கொள்கையுடையவர் குறித்து ஏன் பேச வேண்டும்? இது போன்ற தேவையற்ற கருத்துகளை பொது இடங்களிலும் யூடியூபிலும் பேசுவது ஃபேசனாகி விட்டது. இனி இது போன்று பேசமாட்டேன் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், 4 வார காலத்திற்கு விசாரணை அதிகாரி முன்பு காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்த னையுடன் கனல் கண்ண னுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.