திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே கூட்டுறவுத்துறை சார்பாக துவங்கப்படவுள்ள கலை அறிவியல் கல்லூரி அமையுமிடத்தை கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் மாதவன் பார்வையிட்டார். அமைச்சர் ஐ.பெரியசாமியின் வேண்டுகோளை ஏற்று கல்லூரிக்கான இடத்தை வழங்கிய விவசாயிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்.