மதுரை, ஜூன் 11- மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தின் முன்னாள் இணைச் செயலா ளரும், காப்பீட்டு ஊழியர் மாத இதழ் துணையாசிரியருமான தோழர் ஆர். ராமகிருஷ்ணன் (ராம்கி) அவர்கள் ஜூன் 11 ஞாயி றன்று காலமானர். அவருக்கு வயது 57. இன்சூரன்ஸ் ஊழி யர்கள் சங்கப் பணிகளுடன், தமிழ் நாடு அறிவியல் இயக்கப்பணிகளையும் செய்தவர். இவ ருக்கு சுபாஷினி என்ற மனைவியும் , சுவாதி என்ற மகளும் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் மதுரை கருப்பாயூரணி- காளிகாப்பான்- அம்மாபட்டி அருகில் கோல்டன் பார்க் குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள் காலை 10 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது. மறைந்த தோழர் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில பொதுச் செயலா ளர், மறைந்த கே.ஆர்.சங்கரனின் மருமகன் ஆவார்.