மதுரை, நவ.9- மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகக் கூட்டரங்கில் நவம்பர் 9 அன்று மாவட்ட தேர்தல் அலு வலர் / மாவட்ட ஆட்சித் தலை வர் மரு.அனீஷ் சேகர் , அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதி நிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட் டார். பின்னர ஆட்சியர் தெரிவிக்கை யில், இந்தியத் தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின்படி, 1.1. 2023-ஆம் நாளினைத் தகுதியேற் படுத்தும் நாளாகக் கொண்டு, வாக் காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம், 2023-க்கான பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 26,35,238. இதில் ஆண் வாக்கா ளர்கள்: 12,96,075 பெண் வாக்கா ளர்கள்: 13,38,950 மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 213. மேலூர் சட்டமன்றத் தொகுதி யில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 199 பேர், மதுரை கிழக்கு தொகுதியில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 022 பேர், சோழவந்தான் (தனி ) தொகுதி யில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 500, வடக்கு தொகுதியில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 354 பேர், தெற்கு தொகு தியில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 611 பேர், மத்திய தொகுதியில் 2 லட் சத்து 30 ஆயிரத்து 489 பேர் , மேற்கு தொகுதியில் 3 லட்சத்து ஒரு ஆயி ரத்து, 99 பேர் , திருப்பரங்குன்றம் தொகுதியில் 3 லட்சத்து 13 ஆயி ரத்து 588 பேர் , திருமங்கலம் தொகு தியில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 936 பேர், உசிலம்பட்டி தொகுதியில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 440 பேர் என உள்ளனர்.
9.11.2022 முதல் 08.12.2022 வரை அலுவலக வேலை நாட்களில் வாக் குச்சாவடி மையங்கள் / வட்டாட்சி யர் அலுவலகங்கள் / மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் சேர்த் தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து நேரடியாக அளிக்கலாம் அல்லது www.nvsp. in என்ற இணையதள முகவரி மூல மாக விண்ணப்பிக்கலாம். கைப்பேசியில் வாக்காளர் உதவி எண் என்ற செயலி செயலி (Voters Helpline Mobile App) மூலமாக வும் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 12, 13, 26, மற்றும் 27 ஆகிய நான்கு நாட்களில், வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட முகாம்களில் வாக்காளர் அடை யாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பு செய்திட படிவம் 6 பி பூர்த்தி செய்து கொடுத்து பயன் பெறலாம். வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்க்க படிவத்துடன் வயது மற்றும் முகவரிக்கான ஆதா ரங்களை இணைக்க வேண்டும். மேலும் விவரம் மற்றும் தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய இல வச தொலைபேசி எண் 1950. பெறப்படும் விண்ணப்பப் படி வங்கள் மீது உரிய விசாரணை கள் மேற்கொண்டு இறுதி வாக்கா ளர் பட்டியல் 5.1.2023-அன்று வெளி யிடப்படும் என்று தெரிவித்தார்.