districts

img

சிவகங்கை நகராட்சி வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை, மே 30- சிவகங்கை நகராட்சிட்குட்பட்ட பகுதிகளில் ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2022-2023-இன் கீழ்  ரூ.01.60 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் செட்டியூரணி புனர மைத்தல் பணிகள், ரூ.03.89 கோடி மதிப்பீட்டில் புதிய வாரச்சந்தை அமைத்தலுக்கான பணிகள், ரூ.01.95 கோடி மதிப்பீட்டில் பேருந்து  நிலையம் புனரமைக்கும் பணிகள், ரூ.35 மதிப்பீட்டில் குண்டூரணி புனர மைக்கும் பணிகள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ்  ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் மஜீத் ரோட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கி ணைந்த சமையல் அறைக் கட்டிடம் கட்டுமானப் பணிகள் , கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-2022-ன் கீழ் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையக் கட்டிடம் கட்டுதல் பணிகள்  குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து தரமான முறை யில் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலு வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத்,தெரிவித்தார். பின்னர், பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு மையம் மற்றும் நகர்ப்பகுதி களில் உள்ள மூன்று நுண்உர செயலாக்க மையங்கள் ஆகியவைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வுகளின் போது நகர்மன்ற தலைவர் துரைஆனந்த், ஆணையாளர்(பொ) பாண்டீஸ்வரி மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;