districts

img

தென்கிழக்கு ஆசிய பல்கலைக்கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கை: மு.க.ஸ்டாலின்

சென்னை,ஜன.22- 2010 ஆண்டு முதல் 2019  ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுக ளுக்கான 10 அறிஞர்கள் விருது தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. ஒன்றிய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கி, ‘கலை ஞர் மு.கருணாநிதி செம்மொழி  தமிழாய்வு அறக்கட்டளை’யை நிறுவினார். அதன்மூலம், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழியியல், படைப்பிலக்கி யம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நுண்கலைகள் உள்ளிட்டவற்றில் சிறந்த பங்க ளிப்பை வழங்கிய அறிஞர்க ளுக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம் மொழி தமிழ் விருது’ வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2010 ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை  10 ஆண்டுகளுக்கான 10 அறி ஞர்கள் விருது தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப் பட்டனர்.

அவர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமையன்று (ஜன.22) வழங்கினார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் விருதாளர்க ளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர்கள் கோதண்டராமன், சுந்தரமூர்த்தி, மருதநாயகம், மோகனராசு, மறைமலை இலக்குவனார், ராஜன், உல்ரிக் நிக்லாஸ் உள்ளிட்டோர் விருதுகளை பெற்றனர். விருதாளர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, பாரா ட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விழாவில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகை யில், “செம்மொழி சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கக்கூடிய வகையில் முதல் கட்டமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக் கழகங்களில் செம்மொழி தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்” என்றார்.

;