districts

img

பட்டியலின மக்களை தாக்கிய சாதி ஆதிக்கச் சக்தியினர் வாகனங்கள், வீடுகள் உடைப்பு -மக்கள் மறியல்

மதுரை, ஜூன் 3-  மதுரை மாவட்டம் யா.ஒத்தக் கடை அடுத்துள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் திருவிழாவில் வெள்ளியன்று இரவு  ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற் றது.  அப்போது நிகழ்ச்சியை பார்க்க விடாமல் மறைத்தபடி ஒரு தரப்பி னர் ஆடிக்கொண்டிருந்தனர். இத னைப் பார்த்த மற்றொரு தரப்பினர், இடையூறு செய்ய வேண்டாம் என கூறியுள்ளனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு, மோதலாக மாறி யது.  பட்டியலின மக்கள் வசிக்கக் கூடிய நொண்டிகோவில் தெரு வுக்குள் புகுந்த சாதி ஆதிக்கச் சக்தி யினர் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்குகள் மற்றும் ஓட்டு வீடுகளை உடைத்து சேதப் படுத்தினர்.  மேலும் வீட்டில் இருந்த பட்டி யலின மக்களையும் கம்பு மற்றும் கம்பிகளால் தாக்கியுள்ளனர். இதனை அறிந்து சம்பவத்தை இடத்திற்கு வந்த யா.ஒத்தக்கடை காவல்துறையினர் பட்டியலின மக்களிடம் புகாரைப் பெற்று சாதி  ஆதிக்க சக்தியினர் மீது வன்   காடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டியலின மக்களின் 35-க்கும்  மேற்பட்ட பைக்குகள் சேதப்படுத தப்பட்டன. அதே பகுதியை சேர்ந்த  செல்வகுமார் (32), மணிமுத்து (32),  பிளம்பர் குமார் (39), பழனிக்குமார் (35) ஆகியோர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலால் திரு மோகூர் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதி  முழுவதிலும் நூற்றுக்கும் மேற்  பட்ட காவல்துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர்.  தாக்குதல் நடத்திய சாதி ஆதிக்கச் சக்தியினரை கைது செய்யக்கோரி பட்டியலின மக்கள் யா.ஒத்தக்கடையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆர்டிஓ  பேச்சுவார்த்தை நடத்தினார். ‘குற்ற வாளிகளை தேடி வருகிறோம் ;விரைவில் கைது செய்துவிடு வோம் என்று கூறியதை தொடர்ந்து, மறியலை கைவிட்டனர். தீ.ஒ.முன்னணி-சிபிஎம் நேரில் ஆறுதல் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர், பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை சந்தித்து நேரில் ஆறுதல் கூறினர்.  தீண்டாமை ஒழிப்பு முன்னணி மதுரை புறநகர் மாவட்டத் தலை வர் செ. ஆஞ்சி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகாச்  செயலாளர் எம். கலைச்செல்வன், தாலுகாக்குழு உறுப்பினர் ஆர். மனோகரன் ஆகியோர் பாதிக்கப் பட்ட மக்களை நேரில் சந்தித்து விபரம் கேட்டறிந்து, ஆறுதலை கூறினர். பாதிக்கப்பட்ட பட்டிய லின மக்களுக்கு உரிய முறையில்  நீதி கிடைக்க வேண்டும்.முறையாக விசாரணை நடத்தி குற்றவாளி களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். (ந.நி)

;