districts

img

சிஐடியு நடைபயணக்குழுவினருக்கு திண்டுக்கல்லில் மலர் தூவி வரவேற்பு

திண்டுக்கல். மே 28- விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்  ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் நடை பயண பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லுக்கு ஞாயி றன்று வந்த நடைபயணக்குழு வினருக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.  பேகம்பூரில் சிஐடியு மாவட் டக்குழு அலுவலகத்தில் உள்ள தோழர் ஏ.பாலசுப்ரமணியம் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு தலைவர் நாகை மாலி மாலை  அணிவித்தார்.சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன்,  மாவட்ட நிர்வாகிகள், வெங்கிடு சாமி, பேரா. எஸ்.மோகனா, தன சாமி,பிச்சைமுத்து, ராம்குமார், தவக்குமார், என்.பாண்டியன், என். ராமநாதன், அரசு ஊழியர் சங்க  மாவட்டத்தலைவர் முபாரக்அலி,  

அங்கன்வாடி சங்க மாவட்டச்செய லாளர் பத்மா உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்  டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர் பி. ஆஸாத், நகரச்செயலாளர் அரபு முகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  அங்கன்வாடி ஊழியர் சங்கத்தி னர் இரு புறமும் வரிசையாக நின்று  நடைபயணக்குழுவிற்கு மலர் தூவி  வரவேற்பளித்தனர். யானைத் தெப்பத்தில் விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், மலை வாழ் மக்கள் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், ஜனநாயக  மாதர் சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக் கப்பட்டன. கணேஷ் தியேட்டர் அரு கில் அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம், காப்பீட்டு கழக ஊழி யர் சங்கம், பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், ஓய்வூதியர் சங்  கம், கட்டுமான சங்கம், ஏ.ஐ.டி.யு.சி, போன்ற தோழமை சங்கங்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட் டது. நாகல்நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்ட உதவி செயலாளர் ஜி. வெங்கிடுசாமி தலைமை வகித் தார். வரவேற்புக்கு தலைவர் எஸ்.ஏ. டி.வாஞ்சிநாதன் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர் நாகை  மாலி, சிஐடியு மாநில செயலாளர்  கள் எஸ்.ராஜேந்திரன், பி.என். தேவா, சிஐடியு மாவட்டச்செயலா ளர் கே.பிரபாகரன் உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட உதவி செயலா ளர் சி.பி.ஜெயசீலன் நன்றி கூறி னார்.

சின்னாளபட்டி, நிலக்கோட்டை

நிலக்கோட்டையில் சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் சாதிக் அலி தலைமையில் வர வேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் கே. பிரபாகரன் ,மாநிலச் செயலாளர்கள் ராஜேந்தி ரன், பி.என். தேவா ஆகியோர் பேசி னர். பயணக்குழுவுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர். சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் என். பாண்டி ஆகியோர் பயணத்தை கொடி அசைத்து துவக்கி வைத்த னர். சின்னாளப்பட்டி பிரிவில் சிஐ டியு ஒன்றிய கன்வீனர் வி.கே.முரு கன், மாவட்ட துணைத் தலைவர்  ஆர். பால்ராஜ்,சிபிஎம் ஒன்றிய செயலாளர் சூசைமேரி உள்ளிட்ட  பல்வேறு சங்கங்களை சேர்ந்த வர்கள் உற்சாக வரவேற்பு அளித்த னர். சின்னாளப்பட்டி பூஞ்சோலை யில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து நகரில் சாலை  போக்குவரத்து சங்க மாவட்ட செய லாளர் தனசாமி தலைமையில் வர வேற்பு அளிக்கப்பட்டது.

;