சின்னாளப்பட்டி, ஏப்.22- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சிறப்பு நிலைப் பேருராட்சியின் மாதாந்திர. கூட்டம் பேருராட்சி மன்றத் தலைவர் பிரதீபா கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் நந்தகுமார், துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மே 10 ஆம் தேதி சமுதாயக் கூடம் மற்றும் பேரூராட்சிக் கடைகள் ஏலம் விடுவதாக செயல் அலுவலர் அறிவித்த தற்கு நோட்டீஸ் போர்டில் ஒட்டுவீர்களா, பத்திரிகையில் விளம்பரம் கொடுப்பீர்களா என்றுக் கேட்டதற்கு செயல் அலுவலர் நந்த குமார், பத்திரிகையில் விளம்பரம் கொடுப் போம் என்றார். 13 ஆவது வார்டு கவுன்சிலர் சாந்தி கணேசன் ,அவரது வார்டுக்கு அடிப் படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்ததாக குறிப்பில் இருந்ததை வாசிப்பாளர் வாசித்தார. இதைத்தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கை களும் நிறைவேற்றப்படும் என்று தலைவர் உறுதியளித்தார். மேலும் அனைத்து வார்டுக ளிலும் உள்ள முதியவர்களுக்கு உதவித் தொகை கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் இ.பெரியசாமியின் மூலம் வழங்கப்படும் என்றார். முடிவில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப் பட்டன. இக் கூட்டத்தில் தலைமை எழுத்தர் கலியமூர்த்தி,துப்புரவு ஆய்வாளர் கணேசன் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.