districts

மதுரை விரைவு செய்திகள்

காலமானார்

மதுரை, மே 16- மதுரை மாநகர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு  பகுதிக்குழு 74-ஆவது வார்டு  பந்தடி கிளை செயலாளர் ஆர்.துவாரகன் அவர்களின் தந்தை ராமாராவ் (75) திங்க ளன்று காலமானார். அவரது மறைவு செய்தி யறிந்து கட்சியின் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், மாவட் டச் செயற்குழு உறுப்பினர் அ.ரமேஷ், பகுதிக் குழு  செயலாளர் ஜெ.லெனின் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பாலத்தில் சென்ற காரில் தீ

சிவகாசி, மே 16- சிவகாசி அருகே உள்ள இரட்டை பாலத்தில் சென்று கொண்டிருந்த காரில் திடீ ரென தீ பற்றி எரிந்தது. திருவில்லிபுத்தூர் பகுதி யைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர், தனது காரில் சிவ காசிக்கு சென்று விட்டு, திரு வில்லிபுத்தூருக்கு திரும்பிக்  கொண்டிருந்தார். இரட்டைப் பாலம் அருகே சென்ற போது, காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதையடுத்து, ஓட்டுநர் மாவீரன் காரை உடனடியாக  நிறுத்தியுள்ளார். பின்பு, காரில் இருந்த மூன்று பேரும் கீழே இறங்கி தப்பினர். பின்பு, சிவகாசி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிவகாசி  நகர் காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி வாகனம் மோதி பள்ளி மாணவன் பலி

தேனி, மே 16- உத்தமபாளையத்தில் சாலையில் நின்றுகொண்டி ருந்த பள்ளி மாணவர் மீது  கல்லூரி பேருந்து மோதிய தில் காயம்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். தேவாரம் அருகே டி. ரெங்கநாதபுரத்தை சேர்ந்த வர் ராஜா மகன் சந்துரு (16).இவர் ராயப்பன்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு  படித்து வந்தார். திங்களன்று பள்ளிக்கு செல்லும் பொருட்டு கோகிலாபுரம் விலக்கு அருகே நின்றிருந்த போது தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராவிதமாக மாணவர் மீது மோதியது. இதில் படுகா யமடைந்த மாணவன் சந்துரு பாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது  குறித்து பாளையம் காவல் ஆய்வாளர் சிலைமணி, கல்லூரி பேருந்து ஓட்டுநர் கம்பத்தை சேர்ந்த கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்.

16 பவுன் நகை, பணம் திருட்டு 

தேனி, மே 16- தேனியில் வீட்டின் கதவை உடைத்து 16.5 சவரன் எடை யுள்ள நகை, பணம் திருடு  போனது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேனி கே.ஆர்.ஆர் நகரை சேர்ந்தவர் பாப்புசாமி மனைவி ஜெயராணி (70).  இவரது மகன், மகள் அமெ ரிக்காவில் குடியிருந்து வரு கிறார்கள். கடந்த 14 ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து வந்திருந்த தனது மகள் அசுவந்தம்மாளுடன் திருச்  செந்தூர் முருகன் கோவி லுக்கு சென்று விட்டு 16 ஆம் தேதி காலை வீட்டிற்கு வந் துள்ளனர். அப்போது கேட், பிரதான கதவு, அறைகளின் கதவுகள், பீரோ கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. பிரோவிலிருந்த 16.5 சவ ரன் எடையுள்ள நகைகள், வெள்ளி கொலுசு, வெளி நாட்டு பணம் உட்பட ரூ.5  லட்சம் மதிப்பிலான பொருட்  கள் திருடப்பட்டது தெரியவந்  தது. இதுகுறித்து ஜெயராணி அளித்த புகாரின் பேரில்  காவல் ஆய்வாளர் மாய ராஜ லட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார். மேலும் தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

வெங்காயத்திற்கு இழப்பீடு வழங்க கோரி கோட்டாட்சியரிடம் மனு

அருப்புக்கோட்டை, மே 16- திருச்சுழி பகுதியில் காரிப் பருவத்தில் பயிரிடப் பட்ட வெங்காயத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டு மென அருப்புக்கோட்டை கோட்டாட்சியரிடம் தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். திருச்சுழி வட்டத்திற்கு உட்படடது சுத்தமடம் கிராமம். இங்கு கடந்த 2020 ஆம் ஆண்டு காரிப் பரு வத்தில் சுமார் 300 ஏக்கரில் வெங்காயம் பயிரிடப் பட்டதாம். விவசாயிகள் அனைவரும் வெங்காய பயி ருக்கான இன்சூரன்ஸ் தொகையை கூட்டுறவு கடன் சங்கத்தில் செலுத்தினர். இதையடுத்து, பயிர்கள் சேதமடைந்துள்ளது. எனவே, உரிய இழப்பீடு வேண்டுமென விவசாயி கள் தெரிவித்ததையடுத்து, பலருக்கு இழப்பீடு  கிடைத்தது. ஆனால், கிராம நிர்வாக அலுவலர், சுத்த மடம் பகுதியில் வெங்காயம் பயிரிடப்படவில்லை யென புள்ளியியல் துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, விவசாயிகளின் வங்கி கணக்கை முடக்கி பணத்தை திரும்ப பெற்றதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், காரிப் பருவத்தில் 2020 இல் வெங்காயம் பயிரிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் வி.முருகன், சிபிஎம் திருச்சுழி ஒன்றியச் செயலாளர் மார்கண்டேயன், பெரு மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

100 நாள் வேலை தொழிலாளர்கள் முற்றுகை

திண்டுக்கல், மே 16- திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 48-ஆவது வார்டு பகுதியில் 100 நாள் வேலை  செய்யும் பெண்களுக்கு ஒரு வார கால சம்பளம் வரவில்லை என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாநகராட்சியில் முற்றுகை போராட்டத்தில் பெண் தொழிலாளர்கள் ஈடு பட்டனர்.  இதனையடுத்து மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அனைவருக்கும் சம்பளத்தை அவரவர் வங்கிக் கணக்கில் ஏற்றியது. இத னால் 100 நாள் வேலை பெண்கள் தங்கள் போராட்டம் வெற்றி பெற்றதாக உற்சாகத்து டன் சென்றனர்.

நீட் குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர் மீதான  வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, மே. 16-  நீட் தேர்வு சம்பந்தமாக சமயநல்லூர் அரசு பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது. மதுரை, சமயநல்லூர் பகுதியை சேர்ந்த வர் அருண்குமார். இவர் தன்மீது பதியப் பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘‘2020 செப்டம்பர் 8-ஆம் தேதி கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி  சமயநல்லூர் அரசு பள்ளி முன்பு நீட் தேர்வு  குறித்து ஆர்ப்பாட்டம் செய்ததாக என் மீது  சமயநல்லூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் போது எந்த ஒரு பொது சொத்தும் சேதப்படுத்தவில்லை, அமைதி யான முறையில் அரசு விதித்துள்ள வழி காட்டுதலின்படியே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. எனவே, என் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு  திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் மீது சமய நல்லூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

திண்டுக்கல், மே 16- மாற்றுத்திறனாளிகளுக்கான அடை யாள அட்டை வழங்க மறுக்கும் திண்டுக்  கல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மாற்றுத்திறனாளி அதிகாரி ஆகியோரைக் கண்டித்து அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் பஸ் பாஸ், ரயில் பாஸ், அடையாள அட்டை  உள்ளிட்ட அனைத்து பணிகளையும் திண் டுக்கல்லில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வாரந்தோறும் திங்க ளன்று செய்து தர வேண்டும் என்று திண்  டுக்கல் ஆட்சியர் விசாகன் உத்தரவிட் டுள்ளார். ஆனால், திங்களன்று காலை அடை யாள அட்டை பெற மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தந்த மாற்றுத் திறனாளிகளில் 20 பேருக்கு மட்டுமே அடை யாள அட்டை வழங்கப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே அடை யாள அட்டை வழங்கப்படும் என்றும் மருத்துவர்கள் கூறி அடையாள அட்டை வழங்க மறுத்தனர்.  இந்த பிரச்சனையில் முழுமையாக மேற்பார்வை செய்து ஒழுங்குபடுத்த வேண்டிய மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தன்னுடைய வேலையை சரி வர செய்யாததைக் கண்டித்தும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அலு வலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.  போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். இதில்,  மாவட்ட துணைச்செயலாளர் ரவி உள்  ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இன்றைய நிகழ்ச்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மதுரை மாநகர் - புறநகர்,  சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் மாவட்ட  கட்சி மாநில பிராக்சன் உறுப்பினர்களுக்கான சிறப்பு பேரவை கூட்டம்:  செவ்வாயன்று காலை 10.00 மணி, இடம்:  வில்லாபுரம் லீலாவதி மண்டபம்   மதுரை.  பங்கேற்பு: மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.நூர்முகமது, மதுக்கூர் இராமலிங்கம் 

மாதிரி பட்டாசுகளை வெடித்த தொழிலாளி படுகாயம்

சிவகாசி, மே 16- சிவகாசி அருகே உள்ளது நாரணபுரம். இங்கு தனியா ருக்கு சொந்தமான சீமாட்டி பட்டாசு ஆலை இயங்கி வரு கிறது. இங்கு தயார் செய்யப்பட்ட பட்டாசுகளில் சில மாதிரி களை எடுத்து ஆலையின் வெளியே வெடிக்க வைத்து சோதனை செய்வது வழக்கம். அதேபோல், திங்களன்று மாலை, பாறைப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி (58) என்பவர் மாதிரி வெடியை வெடித் துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென விபத்து  ஏற்பட்டது. இதில் கந்தசாமி தீக்காயமடைந்தார். இதை யடுத்து, சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, சிவகாசி யில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு சலவைத்துறையை பயன்படுத்த எதிர்ப்பு 

தேனி, மே 16- மதுரை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கூடலூரில் உள்ள சல வைத் துறையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தேனி  ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்ட அணைத்து வண்ணார் முன்னேற்ற நல  சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் சிவகுமார், விக்ரம்,  பி.சுரேஷ் ஆகியோர் தலைமையில்ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. வழக்கறிஞர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட நூற்  றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப் பாட்டத்தில் சாதி சான்று வழங்கும் போது, தொழிலையும் முன்னிறுத்தி உள்ள படிவத்தை நீக்க வேண்டும், அனை வருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

சிறுமிக்கு திருமணம் செய்து கர்ப்பம் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு 

தேனி, மே 16- போடி அருகே சிறுமிக்கு திருமணம் செய்து, பிரச வத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் கணவர் மற்றும் இரு குடும்பத்தினர் மீது குழந்தை திருமண சட்டம் மற்றும்  போக்சோ சட்டத்தின் கீழ் தேனி மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். போடி அருகே டொம்புசேரியை சேர்ந்த 17 வயது சிறுமி யும், அதே ஊரைச் சேர்ந்த கனிராஜாவும் காதலித்து வீர பாண்டியில் திருமணம் செய்துள்ளனர். கர்ப்பிணியான சிறு மிக்கு வயிறு வலி வர பிரசவத்திற்கு அங்குள்ள ஆரம்ப சுகா தார நிலையத்தில் சேர்த்துள்ளனர். ரத்தம் குறைவாக இருப்பதாக கூறி மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார் .மருத்துவர் கொடுத்த தக வலின் பேரில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு  ஆய்வாளர் மலரம்மாள், சிறுமியின் கணவர் கனிராஜா, அவ ரது தயார் வசந்தி, சிறுமியின் தந்தை மணிகண்டன், தாயார்  செல்வி ஆகியோர் மீது குழந்தை திருமணம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
 

 


 

;