districts

img

பொட்டல் கிராமத்தில் 3வது நாளாக காட்டு யானைகள் அட்டகாசம்

திருநெல்வேலி ,பிப் .14- கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் கிரா மத்தில் 80 அடி கால்வாய், சீரங்குளம் பாசனத்திற்கு உட் பட்ட விவசாய நிலங்கள் உள் ளன. அதில் பொட்டல் பகுதி யை சார்ந்த விவசாயிகள் நெற்பயிர் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை இரவில்  யானைகள் கூட்டம் வயலு க்குள் புகுந்து பொட்டலை சேர்ந்த இசக்கி ஜெயபால், மகாதேவன், சண்முகம், மாசானம் ஆகியோருக்கு சொ ந்தமான சுமார் 3 ஏக்கர் பரப்ப ளவு வயலில் நெற்பயிர்களை சேதப்படுத்தி கல்லிடைக் குறிச்சி கோட்டை தெருவைச் சார்ந்த சித்திரை கோனார் மற்றும் ராஜகோபால் ஆகியோருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் காட்டு யானை கூட்டங்கள் சேதப்படுத்தி யுள்ளன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.  எனவே வனத்துறையி னர் யானைக் கூட்டங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாதி க்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் விவசாயி கள் கோரிக்கை விடுக்கின்ற னர்.தொடர்ந்து 3வது நாளாக காட்டு யானைகள் நெல் பயிர்களை மிதித்து அட்டகா சம் செய்ததால் விவசாயி கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.