districts

img

சோமலே எழுதிய புத்தகங்கள் பொக்கிஷம்

மதுரை, ஜன.23- புத்தக விநாயகர் என்று அழைக்கப்படும் சோமசுந்தர விநாயகர் கோவில் இரண்டாம்  ஆண்டு வருடாபிஷேகம் மதுரை மேலூரை அடுத்துள்ள கொடுக் கம்பட்டி பஞ்சாயத்து பேப னையம்பட்டியில் சனிக்கிழமை யன்று நடைபெற்றது. சோமலே சோமசுந்தரம் வரவேற்புரை யாற்றினார். கோவிலூர் ஆதீனம் சீர் வளர்சீர்  ஞானதேசிக சுவாமி கள் உரையாற்றினார்.  எழுத்தா ளர் காரைக்குடி  கரு.முத்தையா, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.சுவாமிநாதன், மதுரை மாவட்ட நூலக அலுவலர் சு.யசோதா ஆகியோர் வாழ்த் திப்பேசினர். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். மு.கணே சன் நன்றி கூறினார்.  தொடர்ந்து கலை நிகழ்ச்சி கள், பாப்பாகுடிபட்டி, கொடுக் கம்பட்டி, பெருமாள்பட்டி, கீழ வளவு, மலைபட்டி, ஆகிய அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் குழந்தைகள் தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அன்ன தானம்  நடைபெற்றது.  மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன் பேசுகை யில், சங்க இலக்கிய உரைக்கு இதுவரை வந்திருக்கிற மிகச் சிறந்த தொகுப்பு எதுவென்றால் கோவிலூர் ஆதீனம் வெளி யிட்ட தொகுப்புதான். என்னு டைய ஆசிரியர் தமிழண்ணல் தான்  மொத்த உரையின் தொகுப் பாசிரியர்.  ஒரு எழுத்தாளர் கட்டிய விநாயகர் கோவில் இது. பொருள் தேடி வாழ்க்கையில் எல்லோரும் போகிறோம். ஆனால் நம்மு டைய  வேருக்கு நீர் ஊற்ற வேண் டும் என்ற எண்ணம் இருப்பது போல,  நம்ம ஊருக்கு நம்ம என்ன திருப்பிக் கொடுக்கிறோம்  என்பதுதான்.  உண்மையில் சோம லேவை பார்த்தால் எனக்கு ரொம்ப ஆச்சரியம்.  ஒருவர் எத் தனை புத்தகம் தான் எழுத முடி யும்!  இவர் எழுதாத ஏதாவது இருக்கா என்று பார்த்தேன். ஏனென்றால் மதுரை மாவட்ட வர லாறு அவர் தான் எழுதியுள் ளார். காஞ்சிபுரம் மாவட்ட வர லாறும் அவர்தான் எழுதியுள் ளார். 1990களில் உள்ள 400 பக்க தமிழக மரபும் பண்பாடும் என்ற புத்தகம்  அன்றைக்கு மிகப் பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. இவை எல்லாவற்றையும் விட  நான் படித்து மிகவும் வியந்த புத்தகம், அன்றைய ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியாரை பற்றி விவ சாய முதலமைச்சர் என்று அவர் எழுதிய புத்தகம்!. அது ஒரு பொக்கிஷம். இவையெல்லாம் மிகச் சிறந்த புத்தகங்கள். இவ்வ ளவு பெரிய எழுத்தாளர், தன்னு டைய  ஊரில் ஒரு கோவில் கட்டி யுள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இடத்தில் கல்விப்பணி, சமூகப் பணி என்று நீங்கள் எது செய்தாலும் ஒரு நாடா ளுமன்ற உறுப்பினர் என்ற முறை யில் என்னுடைய பங்களிப்பு அதில் இருக்கும்.  ஒரு சின்ன தொழிற்கூடம் உருவாக்க வேண்டுமென சொல்லியுள்ளீர் கள்.  இங்கு ஒரு மாடர்ன் நூலகம் உருவாக்குங்கள். அதற்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ அதனை நாங்கள் செய்கிறோம்.  இந்த இடத்திலே நீங்கள் சோம லேவோட மரபுவழி மகன்! நாங் கள் எல்லாம்  சோமலேவோட வாசக மகன்கள்.  கனவுகளை விதைத்த மனிதர்க்கு, இந்த கனவை மிகச் சிறப்பாக்குவதற்கு உங்களோடு துணை நிற்போம் என்றார்.