districts

img

பரமக்குடியில் புத்தகத் திருவிழா துவங்கியது

இராமநாதபுரம், ஆக.8-  மக்கள் நூலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்  கம் இணைந்து நடத்தும் புத்த கத் திருவிழா பரமக்குடியில் செவ்வாயன்று துவங்கியது. விழாவிற்கு வரவேற்புக் குழு தலைவர் பெ.சேகர் தலைமை வகித்தார். அறி வியல் இயக்க மாவட்ட நிர்  வாகி கு. காந்தி வரவேற்றார்.  மாவட்ட ஆட்சியர் பி. விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். விழா வில் சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, துணைத்தலைவர் கே.எம்.குணா, காவல்துறை டிஎஸ்பி  எம்.சபரிநாதன், பரமக்குடி நகராட்சி ஆணையர் திரு மால் செல்வம், அறிவியல்  இயக்க மாநில மாவட்ட  நிர்வாகிகள் சுப்பிரமணி, அய்யாசாமி, வரவேற்புக் குழு செயலாளர் அட்வகேட்  சி. பசுமலை, பொருளாளர் வசந்தகுமார், சிபிஎம் மாவட்  டச் செயலாளர் வி.காசிநாத துரை, சிபிஐ மாவட்டச் செய லாளர் என்.எஸ்.பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.