districts

வழக்கு தொடரப்படும் என சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் அறிவிப்பு

மதுரை, பிப்.2- மதுரை மாநகராட்சி துணை  மேயர் டி.நாகராஜன் பொதுப் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள் ளதாக  அவதூறு பரப்பும் பாஜக  பிரமுகர் மீது வழக்கு தொடரப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச்  செயலாளர் மா.கணேசன் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாநகராட்சி 80 ஆவது  வார்டு ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி தெருவில் கடைசி எம்.ஜி.ஆர். கிழக்கு தெருவில் மதுரை மாநக ராட்சி துணை மேயர் டி.நாகராஜன்  20 அடி அகல பாதையை 7 அடி  பாதையாக குறைத்து ஆக்கிரமிப்பு  செய்துள்ளதாக மதுரை புது விளாங்குடியைச் சேர்ந்த பாஜக  பிரமுகர் பி.சிவாஜி அரசியல் உள்நோக்கத்தோடும் ,மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி  மற்றும் துணை மேயர் மீது அவதூறு பரப்பும் நோக்  கத்துடனும்  தமிழ்நாடு உள்ளாட்சி  அமைப்புக்கள் முறை நடுவர் மன்  றத்தில் பொய்ப்புகார் அளித்துள் ளார்.   நேதாஜி தெரு கடைசி - எம்ஜிஆர் கிழக்கு தெரு கடைசியில் முட்டுச்சந்தாக இருந்த பட்டாவுடன்  கூடிய இடத்தை ( 2176 சதுரடி  கொண்ட 5 சென்ட் ) டி.நாகராஜனின்  மனைவி என்.செல்வராணி உள்பட 4 பேர் 2018 ஆம் ஆண்டு வாங்கியுள்  ளனர். இந்த 4 வீடுகளின் உரிமை யாளர்கள் சொந்த பயன்பாட்டிற்கு 7 அடி பாதையை விட்டு வீடுகள்  கட்டியுள்ளனர்.

தகவல் பெறும்  உரிமை சட்டத்தில் பெறப்பட்ட ஆவ ணங்களில் இருந்தும்  பத்திரங்கள் மற்றும் சட்ட விதிகளின் படியும் டி. நாகராஜனின் மனைவி என்.செல்வ ராணி  பொதுப்பாதையை ஆக்கிர மிப்பு செய்யவில்லை என்பது தெளி வாக உள்ளது.  ஆனால் மதுரை மாநக ராட்சிக்கு உட்பட்ட இடங்களில் அள வீடு செய்யும் போது சட்ட விதி களின்படி வருவாய்த்துறை வரை படங்கள் (ஆவணங்கள்) அடிப்ப டையில் தான் அளவீடு செய்யப்பட வேண்டும் . ஆனால் மாநகராட்சி இட அளவீட்டாளர் பத்திரத்தின் அடிப்படையில் அளவீடு செய்துள் ளார். இது சட்ட விதிகளுக்கு மாறா னதாகும். இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த சிவாஜி என்பவர் அரசி யல் உள்நோக்கத்தோடு தொடர்ச்சி யாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும், துணைமேயர் டி.நாக ராஜன்  மீதும் அவதூறு பரப்பும்  நோக்கத்துடன் செயல்பட்டு வரு கிறார் . இதனை வன்மையாக கண்  டிக்கின்றோம். இந்த அவதூறு களை கட்சியும்  துணைமேயர் டி. நாகராஜனும் சட்ட ரீதியாக எதிர் கொள்வோம். பாஜக பிரமுகர் சிவாஜி  மீது அவதூறு வழக்கு தொடரப் படும் என்பதனை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

;