திண்டுக்கல், செப்.11- திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான இரண்டு வார ஸ்டுடன்ஸ் இண்டக்சன் புரோகிராம் துவக்கவிழா திங்க ளன்று நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி இயக்குநர் ஆர்.எஸ்.கே.ரகு ராம், அறக்கட்டளை மேலாளர் சூர்யா, கல்லூரி முதல்வர் முனைவர் வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக சென்னை குளோபல் ஆட்டோமேட்டிக் ரிசர்ச் சென்டர் இயக்குநர் முனைவர் ராம தாஸ் ஆறுமுகம் சகுந்தலை, பட்டிமன்ற பேச்சாளர் எஸ். ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் முதலாமாண்டு மாணவர்கள், பேராசிரி யர்கள் கலந்து கொண்டனர். (நநி)