மதுரை, ஏப்.18- ஒன்றிய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், ஆன்லைன் அபராதம் முறை கை விடப்பட வேண்டும், கட்டுப்படியான மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்க தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசவேண்டும், ஆட்டோவிற்கு தனியான “ஆப்” உருவாக்க வேண்டும், ஆட்டோ தொழிலாளர் களுக்கு வீடு கட்டுவதற்கு கட்டு மானத் தொழிலாளர்களுக்கு வழங்கு வது ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆட்டோ தொழிலாளர்கள் திங்க ளன்று போராட்டம் நடத்தினர்
மதுரை
மதுரையில் மாவட்டப் பொதுச் செயலாளர் கனகவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி யின் அரசடி பகுதிக் குழுச் செயலா ளர் கு. கணேசன், சிஐடியு மாவட்டத் தலைவர் இரா.தெய்வராஜ், மாவட்டப் பொருளாளர் அறிவழகன், அழகு ராஜ், முருகன், முனீஸ்வரன், நரசிங்க பெருமாள், பெரியதம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகரில் நடைபெற்ற போரா ட்டத்தில் சிஐடியு சாலைப் போக்கு வரத்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் எல்.முருகன், சிஐ டியு மாவட்டத் துணைத் தலைவர் ஆர். பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அருப்புக்கோட்டையில் தமிழ் செல்வராஜ் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலா ளர் எஸ்.காத்தமுத்து, கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் பி.ராமர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிவகாசியில் மாவட்டத் தலைவர் வி.மகேந்திரன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.முரு கன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா, பழனி, ஜோதிமணி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல் ஆட்சியர் வளாகம் முன்பு நடைபெற்ற முற்றுகை போராட் டத்திற்கு ஆர்.பால்ராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத்தலைவர் கே.பிரபாகரன், என்.பாண்டியன், பி. முருகேசன், நாகராஜ், ஆஸாத், தன சாமி, அரபுமுகமது, கே.ஆர்.பாலாஜி, தவக்குமார், கோபிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பழனியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் ஆட்டோ சங்கத் தலை வர் கண்ணன், செயலாளர் எஸ்.கே. முருகேசன், சாலை போக்குவரத்து சங்க தலைவர் கே.பிச்சைமுத்து விவ சாயிகள் சங்கத் தலைவர் ராமசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.
சிவகங்கை
சிவகங்கையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத் தலைவர் சசிவர்ணம் மாவட்டப் பொருளாளர் முத்துக்குமார், மாவட்டப் பொதுச் செயலாளர் விஜயகுமார், சிஐடியு மாவட்டத் தலைவர் வீரய்யா, மாவட்டச் செயலாளர் சேதுராமன், சாலை போக்குவரத்து சங்கத்தின் பொதுச்செயலாளர் தட்சிணாமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.