districts

img

மருத்துவமனையில் பட்டியலின மக்களை சந்தித்து சு.வெங்கடேசன் எம்.பி., ஆறுதல்

மதுரை, ஜூன் 4- மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை அடுத்  துள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில்  திருவிழாவில் வெள்ளியன்று இரவு  ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்   இடையூறு செய்ததாக இரு தரப்பினருக்கும்  வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது. மாறி யது.  இதனையடுத்து பட்டியலின மக்கள் வசிக்கும்  தெருவுக்குள் புகுந்த சாதி ஆதிக்  கச் சக்தியினர் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்குகள் மற்றும் ஓட்டு வீடு களை உடைத்து சேதப்படுத்தினர்.  பட்டிய லின மக்களையும் தாக்கினர். தாக்குதலில் காயமடைந்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.  பின்னர் சு.வெங்கடேசன் எம்.பி., செய்தி யாளர்களிடம் கூறுகையில், மதுரை திரு மோகூரில் திருவிழாவையொட்டி நடை பெற்ற சம்பவம் வேதனை அளிக்கும் சம்ப வம். இதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். தலித்  மக்கள் மீதான தாக்குதல் அதிர்ச்சியை ஏற்  படுத்தியுள்ளது, குற்றவாளிகள் மீது பாரபட்ச மின்றி கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தாக்குதலில் பைக் மற்றும் கார் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தாக்கு தலில் சேதமடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மோதல் சம்பவத்தில் காவல் துறையினர் சரியாக தங்களது கடமையை செய்ய வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்  துள்ளது. எனவே அது குறித்தும் விசா ரணை நடத்தப்பட வேண்டும். இனிமேலும் இது போன்ற மோதல்கள் ஏற்படாத வகை யில் காவல்துறை உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்  னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக் கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணே சன், முன்னணியின் மாவட்டச் செயலா ளர்கள் செ.முத்துராணி, ம.பாலசுப்பிரமணி யன்,  மாவட்டப் பொருளாளர் மகாலிங்கம்,  மாநகர் துணைச் செயலாளர் ரமேஷ் கண்ணா, சரவணன், சிபிஎம் மாவட்டக் குழு  உறுப்பபினர் எஸ்.மாயாண்டி, கிழக்கு தாலுகாச் செயலாளர் எம்.கலைச்செல்வன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

;