தூத்துக்குடி, ஜூலை 10- தூத்துக்குடியில் நடைபெற்று வரும் நெய்தல் கலை விழாவில் சனிக் கிழமை இரவு முதல் அதிகாலை 2 மணி வரை கண்ணப்பத் தம்பிரான் கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் - கிரீன் ஸ்டார் நிறுவனம் இணைந்து நடத்தும் நெய்தல் கலை விழா, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் கடந்த 7 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்க ளவை உறுப்பினர் கனிமொழியின் ஏற் பாட்டில் நடைபெற்று வரும் இந்த கலை விழாவில் பாரம்பரியமிக்க மண் சார்ந்த கலைஞர்கள் 300-க்கும் மேற்பட்டோர் தங்கள் குழுவினருடன் பங்கேற்று தங்க ளின் திறமைகளை வெளிப்படுத்தி வரு கின்றனர். இதுதவிர, கலை விழா நடைபெறும் மைதானத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா, புத்தக கண்காட்சி, கை வினைப் பொருள்கள் கண்காட்சி ஆகி யவையும் நடைபெற்று வருகின்றன. நெய்தல் விழாவின் மூன்றாம் நாளான சனிக்கிழமை மாலை மகாமுனி குழு வினரின் சக்கைக் குச்சி ஆட்டத்துடன் கலை விழா தொடங்கியது. தொடர்ந்து, சகா குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சி, முத்துலட்சுமி வில்லுப்பாட்டு, காரமடை சாமிநாதன் குழுவினரின் துடும்பாட்டம், ஹாசி ஜான் பாவா குழு வினரின் சிலம்பாட்டம், சமா் குழுவின ரின் பறையாட்டம், ஓம் முத்துமாரி குழு வினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, செந்தில்- ராஜலட் சுமி தம்பதியின் கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 10.30 மணி முதல் அதிகாலை 2 மணி வரை புரிசை துரைசாமியின் கண்ணப்பத் தம்பிரான் கூத்து நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் பெ. கீதாஜீவன், அனிதா ஆர். ராதா கிருஷ்ணன், மாநகாரட்சி மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.