districts

img

சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு

மதுரை, ஏப். 4-  மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா பாது காப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திங்க ளன்று மதுரை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடை பெற்றது .இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ். அனிஸ் சேகர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு. வெங்கடேசன் மற்றும் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்திற்கு பின்னர்  சு.வெங்கடேசன் எம்.பி., செய்தி யாளர்களிடம் கூறியதாவது:  பல லட்சக்கணக்கான மக்கள் சித்திரை திருவிழாவில் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை யொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கான பாது காப்பு பணிகள் குறித்து ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. ‘டிராக் அழகர்’ செயலி  மக்கள் வசதிக்காக ‘டிராக் அழகர்’ என்ற செயலி உரு வாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் கள்ளழகர் கோவிலில் இருந்து புறப்பட்டு மீண்டும் கோவில் திரும்பும் வரை எந்த இடத்தில் சுவாமி இருக்கின்றது என்பதை கைப்பேசி மூலம் இந்த செயலி யில் மக்கள் தெரிந்து கொள்ள லாம். அந்த இடத்திற்கு வந்து மக்கள் தரிசனம் செய்வத ற்காக இந்த செயலி உருவாக் கப்பட்டுள்ளது.  அந்த அடிப்படையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணத்தை பார்ப்பதற்கு முன்பதிவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வைகை ஆற்றில் கள்ளழகர் வந்து இறங்கி செல்லும் வழியில் இரண்டு  தடுப்பணை உள்ளது.  தடுப்பணை கட்டிய பின்பு நடத்தப்படும் முதல் சித்திரை திருவிழா இதுவாகும். எனவே அந்தப் பகுதியில் பொது மக்களையும், குழந்தைகளை யும் பாதுகாக்கும் வகையில் கூடு தலாக பாதுகாப்பு பணிகள் செய்வது என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் கூடுதலான பாதுகாப்பு வசதி மற்றும் சுகாதார வசதிகளை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும்  ஏற்பாடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.  தென்கரை, வடகரை பகுதிகளிலும் அதேபோல் வடம் போக்கித்தெரு, நத்தம் சாலை ஆகிய பகுதிகளில் பாலம் பணிகள்  நடைபெற்று வருகிறது. மேலும் கள்ளழகர் அதிக நேரம் வந்து தங்கும் அவுட் போஸ்ட் பகுதியில் தற்போது பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியிலும்  வேறு சில இடங்களிலும் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்கும் பாதுகாப்பு வசதிகளை செய்வதற்கு போதிய ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருகிறது.  சுவாமி வந்து செல்லும் பல இடங்களில் சாலையின் நடுவில் தடுப்புகள்  உள்ளது.  இந்த ஆண்டு புதிய சவாலாக பாலம் பணிகள் மற்றும் வைகை ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் என்று பல்வேறு சிரமங்கள் உள்ளன. இவைக ளில் இருந்து மக்களை பாது காப்பது மற்றும் அதற்கான வசதிகளை ஏற்படுத்துவது குறித்து விரிவாக பேசப் பட்டுள்ளது.  வடம் போக்கி தெரு பகுதி யில் மட்டும் இன்னும் சாலை சீர மைக்கப்படாமல் உள்ளது. அவற்றை விரைவில் சீரமைப்ப தற்கு  ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. மேலும் கள்ளழகர் வந்து செல்லும் பகுதியில் சாலை கள் சரியாக போடப்பட்டுள்ளது. சாலைகள் சரியாக இல்லை என்ற புகார்கள், கவல்கள்  வந்தால் அதை உடனடியாக சரி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் கார் பார்க்கிங் இடத்தில்  ஒரு பகுதியில் வாகனங்கள் நிறுத்து வதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.  பன்னிரண்டு ஆம் புலன்ஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் ஆம் புலன்ஸ் செல்வதற்கு தேவை யான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.  இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை சிறப் பாக நடத்தி முடிப்பதற்கான ஆலோசனை கூட்டம் தான் இது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறை நிர்வாகம். மாநகராட்சி நிர்வாகமும் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.