districts

img

விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறை உருவாக்கிடுக!

சிவகங்கை,நவ.27- அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தின்  சிவகங்கை மாவட்ட ஆறா வது மாநாடு சிவகங்கையில் தோழர் மணி நினைவரங்கத் தில் நடைபெற்றது.  பூவந்தி ஊராட்சி மன்ற  துணைத் தலைவர் மகாலிங் கம் சங்கக் கொடியை ஏற்றி னார். மாநாட்டிற்கு பொன்னு சாமி தலைமை வகித்தார். வர வேற்புக்குழு தலைவர் வழக்  கறிஞர் ராஜசேகரன் வர வேற்றுப் பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் ரவி அஞ்சலி தீர்மானங்களை வாசித்தார். மாநிலத் தலை வர் ஏ.லாசர் துவக்கவுரை யாற்றினார். மாவட்ட செய லாளர் மணியம்மா வேலை  அறிக்கையும் மாவட்ட  பொருளாளர் முத்துக்கருப் பன் நிதிநிலை அறிக்கையும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன்,  சிஐடியு மாவட்ட செயலாளர் சேதுராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலச் செயலாளர் பூங்கோதை நிறைவுரையாற்றினார்.  விவசாய தொழிலாளர் களுக்கு என்று தனித்துறை  உருவாக்க வேண்டும். விவ சாய தொழிலாளர்களுக்கு சிறு குறு விவசாயிகள் நல வாரியம் செயல்படுத்தி நிலம் வழங்கி உணவு, வேலை உள்ளிட்ட கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும்.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் தினக்கூலி ரூ. 600 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மாநாட்டில் மாவட்டத் தலைவராக மணியம்மா, மாவட்டச் செயலாளராக பொன்னுச்சாமி, பொருளா ளராக முத்து கருப்பன் , துணைத் தலைவர்களாக பாலு, பரிசுத்தம், துணைச் செயலாளர்களாக ரவி, வெள்ளைச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;