districts

img

விவசாயத்தொழிலாளர் சங்க பாளையம் ஏரியா மாநாடு

தேனி ,நவ.18- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தேனி மாவட்டம், பாளையம் ஏரியா மாநாடு கோம்பையில் ஆண்டவர் தலைமையில்  நடைபெற்றது .  மாவட்ட தலை வர் எல்.ஆர்.சங்கரசுப்பு தொடக்கி வைத்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏரியா செயலாளர் எஸ்.சஞ்சீவிகுமார், சிஐடியு செயலாளர் டி.கே.சீனிவாசன், ஏ.பெருமாள், லட்சுமணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர் . மாநாட்டில் ஏரியா தலைவராக கே.ஆண்டவர் ,செயலாளராக எம்.தங்கமாயி ,பொருளாளராக பெரிய முத்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.