districts

img

கூடங்குளம் முதல் அணு உலையில் 43.514 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி

திருநெல்வேலி, ஜூலை 29- கூடங்குளம் அணுமின் நிலை யத்தில் முதல் அணுஉலையின் மூலம் இது வரை 43 ஆயிரத்து 514 மில்லி யன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய் யப்பட்டுள்ளதாக அணுமின் நிலைய வளாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.  நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்கு னர் பிரேம்குமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-  கூடங்குளம் முதலாவது அணு உலையில் கடந்த 24-ஆம் தேதி முதல்  எரிபொருள் நிரப்பும் பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 326 நாட்களாக முதலாவது அணு உலை தொடர்ந்து இயங்கி 7,614 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிக்காக 65 நாட்கள் எடுத்துக் கொள் ளப்படுகிறது.  எரிபொருள் நிரப்பும் பணி நடந்து கொண்டிருக்கும் போதே பராமரிப்பு பணிகளும் மேற்கொள் ளப்பட இருக்கிறது. எரிபொருள் நிரப்பும் பணி மற்றும் பராமரிப்பு பணி கள் முடிவடைந்த பின்பு மின் உற்பத்தி தொடங்கப்பட்டு கிடைக் கின்ற ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மத்திய மின் தொகுப்பில் இணைக் கப்பட்டு வினியோகம் செய்யப்படும்.  கூடங்குளத்தில் அமைக்கப் பட்டுள்ள முதலாவது அணு உலை இந்தியாவில் உள்ள 21-வது அணு உலை ஆகும். கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகள் மூன்றாம் தலைமுறைக்கான பாது காப்புடன் அமைக்கப்பட்டுள்ள அணு உலை ஆகும். கூடங்குளம் முதலாவது அணு உலையில் இருந்து இதுவரை 43 ஆயிரத்து 514 மில்லியன் யூனிட் மின்சாரமும், இரண்டாவது அணு உலையில் இருந்து இதுவரை 29 ஆயிரத்து 192 மில்லியன் யூனிட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் அதில் கூறி யுள்ளார்.