districts

மதுரை முக்கிய செய்திகள்

கார் மோதியதில் மூதாட்டி பலி

விருதுநகர், மே28- விருதுநகரில் கார் மோதியதில் மூதாட்டி ஒருவர் உயிரி ழந்தார். விருதுநகர் அய்யனார் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன்(43). இவரது தாயார் சொர்ணம்(80). இவர்  வீட்டிற்கு அருகே உள்ள குப்பைத் தொட்டிக்கு குப்பை களை போடச் சென்றுள்ளார். அப்போது விருதுநகர் ஜக்கம்மாள் புரத்தைச் சேர்ந்த கண்ணன்(25) என்பவர் காரை பின்னோக்கி நகர்த்தியுள்ளார். அப்போது, கார் சொர்ணம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை  மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சொர்ணம் உயிரி ழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மேற்கு காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விருதுநகர் அருகே பாலத் தடுப்புச்  சுவரில் கார் மோதி 2பேர் பலி

விருதுநகர், மே 28-  விருதுநகர் அருகே பாலத்தில் உள்ள தடுப்புச் சுவர்  மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த னர். 5 பேர் படுகாயமடைந்தனர். சிவகாசியை சேர்ந்தவர் பூர்ண சந்திரசேகர் (25) .இவர்  கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.  இந்த நிலையில், கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழா விற்காக தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் காரில் கோவைக்கு சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சிவகாசிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். குருமூர்த்திநாயக்கன்பட்டி அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப் பாட்டை இழந்த கார், திடீரென அருகில் இருந்த பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் வெற்றி மற்றும் வீர பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் பயணம் செய்த பூர்ண சந்திரசேகர் (28), முத்துலட்சுமி (49) தருண் குமார் (09)  மகேஸ்வரி (46) கணேஷ் பாபு (47) ஆகிய 5 பேர் படுகாய மடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  இந்த விபத்து குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் சங்க கொடியேற்று விழா

அருப்புக்கோட்டை, மே 28- அருப்புக்கோட்டை அருகே உள்ள மலைப்பட்டி கிரா மத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிளைத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் முத்துமாரி ஒன்றிய செயலாளர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காமாட்சிநாதன் வரவேற்றார். கிளைச் செய லாளர் ரேணுகாதேவி சங்கக் கொடியை ஏற்றி வைத் தார். கல்வியாளர் திருவேங்கடராஜ், சிஐடியு தலைவர் கணேசன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் பி.ராமர்,  மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் நட ராஜன், மாவட்ட பொருளாளர் பி. அன்புச்செல்வன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மாவட்டச் செயலாளர் கே. நாகராஜ் நிறை வுரையாற்றினார். மேலும் இதில் கிளை நிர்வாகிகள் ஜெயக்குமார், மலைச்சாமி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

யுபிஎஸ்சி தேர்வு: மதுரையில்  53 சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்பு  

மதுரை, மே 28-  ஒன்றிய  அரசின் பணியா ளர் தேர்வாணையம் (யுபி எஸ்சி ) சார்பாக  நாடு முழு வதும் ஞாயிறன்று பல்வேறு பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு நடை பெற்றது.  மதுரை மாவட்டத்தில் 17 தேர்வு மையங்களில் நடை பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சார்பாக சுமார்  6882 பேர் தேர்வு எழுத தகுதி யானவர் என யூபிஎஸ்சி அறி விக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஞாயி றன்று நடைபெற்ற தேர்வில் 3679 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்ததாகவும் அதா வது 53 சதவீதம் பேர் மட்டுமே வந்ததாகவும் 47 சதவீதம் பேர்வரவில்லை என மதுரை மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டு இளை ஞர்கள் மத்தியில் ஒன்றிய அரசு பணிகளுக்கு செல்லும் ஆர்வம் படிப்படியாக குறைந்து வருவதை இது காட்டுகிறது.   மதுரை பல்க லைக்கழக கல்லூரி, மதுரை வக்ஃப் வாரிய கல்லூரி யில் குடிமைப் பணிகள் முதன்மை தேர்வு நடை பெற்ற தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் மா. சௌ. சங்கீதா நேரில் ஆய்வு மேற்  கொண்டார்.

அரிசிக்கொம்பனை டிரோன் மூலம் படம் எடுத்த நபர் கைது 

தேனி, மே 28- கம்பத்தில் அரிசிக் கொம்பன் யானையை வனத்துறை  மற்றும் காவல்துறையினர் அப்புறப்படுத்தும் நடவடிக்கை யின் போது இடையூறு ஏற்படுத்தும் விதமாக டிரோன் மூலம் படம் எடுக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கம்பம் மின்வாரிய அலுவலகம் அருகே சனிக்கிழமை புளியந்தோப்பில் அரிசி கொம்பன் யானை முகாமிட்டு இருந்தது. அப்போது சின்னமனூரைச் சேர்ந்த கண்ணன்  என்பவரது மகன் ஹரிகரன் (23) என்பவர் டிரோன் கேமிரா வை பறக்க விட்டு யானையை படம் எடுக்க முயன்றார். டிரோன் சத்தத்தால் மிரண்ட அரிசி கொம்பன் யானை அங்கிருந்து வெளியேறி சாலையில் ஓடியது. இதனால் அப்பகுதி பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து ஓடினர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வன விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் ஹரிகரனை கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தில்  பரவலாக மழை 

தேனி, மே 28- தேனி மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை பெய்தது.  மூல வைகை ஆற்றில் நீர் வரத்தொடங்கியது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின்  தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை  பெய்த சாரல் மழை காரணமாக உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி காணப்பட்டது. அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக தேனி மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதி களில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. மழையின்  காரணமாக முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணை களில் நீர் வரத் தொடங்கி உள்ளது.  முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.20 அடியாக உள்ளது. அணைக்கு வருகின்ற 50 கன அடி நீர்  அப்படியே திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 52.76 அடியாக உள்ளது. அணைக்கு 56 கன  அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும்  72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை யின் நீர்மட்டம் 41.65 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 88.40 அடியாக உள்ளது. 10 கன அடி நீர்  வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழையளவு  பெரியாறு 3.2, தேக்கடி 0.6, கூடலூர் 1.2, உத்தமபாளை யம் 8.6, சண்முகா நதி அணை 11.6, வைகை அணை 20.6, ஆண்டிபட்டி 30.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

திருவில்லிபுத்தூர் அருகே  அரசு பேருந்து - வேன் மோதி விபத்து: 2 பேர் பலி

திருவில்லிபுத்தூர், மே 28- திருவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டியில் அரசு பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் வேன் ஓட்டுநர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.  ஊட்டியில் இருந்து செங்கோட்டை நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டது. பேருந்தை தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த  சுரேஷ்குமார் (45) என்பவர் ஒட்டி வந்தார். அதேபோல் ராஜ பாளையத்தில் கலை நிகழ்ச்சியை முடித்து விட்டு, கலை  குழுவை சேர்ந்த 18 பேர் மதுரையை நோக்கி வேனில் சென்றனர். வேனை மதுரையை சேர்ந்த ஶ்ரீதர்(31) என்பவர் ஓட்டினார்.  இந்நிலையில் மே 28 அன்று அதிகாலை 2 மணி அளவில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் திரு வில்லிபுத்தூர் அருகே லட்சுமியாபுரம் பகுதியில் சென்ற போது, அரசு பேருந்தும் வேணும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் ஸ்ரீதர்(31), வேனில் பயணித்த ரகு(24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  மேலும் இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்தனர். அவர்களை காவல்துறையினர் மீட்டு திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விருதுநகர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் விருதுநகர் எஸ்.பி சீனிவாச  பெருமாள், டி.எஸ்.பி சபரிநாதன் நேரில் ஆய்வு செய்து  விசாரணை நடத்தினார்.

மதுரையில் ஓட்டுநர் கொலை  வழக்கில்  3 பேர் கைது

மதுரை, மே 28- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்தவர் சரவணகுமார் மகன் காந்திராஜன் (வயது 28). வேன் ஓட்டுநரான இவர் மதுரை ஜீவாநகரில் பகுதியில்  வசித்து வந்தார்.  இந்நிலையில் சனிக்கிழமை இரவு மதுரை தெற்கு வாசல் ரயில்வே மேம்பாலத்தின் கீழே  கொலை செய்யப்பட்டு கிடந்தார். தெற்குவாசல் போலீசார் சம்பவ  இடத்துக்கு வந்து காந்தி ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக கீரைத்  துறை போலீசார் வழக்குப் பதிந்தனர். கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க காவல் உதவி ஆணையர் சண்முகம் உத்தரவின்பேரில் ஆய்வாளர்  முத்து பிரேம்சந்த் தலைமையில் தனிப்படை அமைக் கப்பட்டது தனிப்படை நடத்திய தீவிர விசாரணையில் , காந்தி  ராஜன் காதல் விவகாரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட தும், அவர் காதலித்த இளம் பெண்ணின் குடும்பத்தினரே அவரை கொலை செய்ததும் தெரியவந்தது.  மதுரை கீரைத்துறையை சேர்ந்த மாயழகு என்பவரின் மகளை  காந்திராஜன் காதலித்து வந்தள்ளார். இதற்கு மாயழகு வின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஆனா லும் இளம் பெண்ணுடன் காந்திராஜன் தொடர்ந்து பழகி  வந்துள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த மாயழகின் மகன் காளிதாஸ் (21), 17 வயது சிறுவனான மற்றொரு மகன்  ஆகிய இருவரும் காந்திராஜனை வெட்டி கொலை  செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து காந்தி ராஜன் கொலை தொடர்பாக மாயழகு மற்றும் அவரது 2 மகன்களையும் ஞாயிறன்று போலீ சார் கைது செய்தனர். 

 

 

;